முதலமைச்சா் ஜோசப் விஜய் – திருச்சியில் தில்லான, திகட்டாத, அசத்தலான அதிரடி பேச்சு.
6 மாசம் அமைதி காப்போம் என்று சொன்னவர்களால் 6 நாள் கூட இருக்க முடியவில்லை. ஆட்சி அமைத்த 6 நாளிலேயே புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்”
“இப்போதும் சொல்லிக்கிறேன். இப்பவும் இங்க ரெண்டே பேருக்கு நடுவுலதான் போட்டியே. ஒண்ணு திமுக இன்னொண்ணு தவெக. மற்றவங்களுக்கு இங்க வேலையில்ல. அதை மீறி யாராவது இடையில வந்தா ரிசல்ட் என்னனு தெரியும். அதுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல ராஜா”
அடுத்த வாரத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்படும்.100 யூனிட் இலவச மின்சாரம் திமுக ஆட்சியில் கொண்டு வரப்படவில்லை, ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
நிதி தொடர்பான அனைத்து கதவுகளையும் மூடிவிட்டீர்கள். எல்லாத்தையும் நீங்கள் செய்துவிட்டு பழியை என் மீது போடுகிறீர்கள். என் மீது எத்தனை பழி போட்டாலும் மக்களுக்கானதை செய்து முடிப்பேன்
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் உங்களில் ஒருவரை தான் வேட்பாளராக நிற்கவைக்க போகிறோம்.
தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் சேர்ந்துகிட்டு யாருக்கும் தெரியாமல் பேரம் பேசி ஆட்சி அமைக்க திட்டம் போட்டாங்க. திமுக இப்போது தீய சக்தி மட்டுமல்ல… மக்களை விட்டு ரொம்ப தள்ளிப் போன தூர சக்தி.. பார சக்தி.. ஓர சக்தி.
ஏன் நாங்கள் கோட், சூட் போடக்கூடாதா? அதிகாரம் செலுத்துபவா்கள் தான் கோட், சூட் போட வேண்டுமா?
நம் மனது போலவே கருப்பு, வெள்ளையில் தான் கோட், சூட் போடுகிறேன், கலா் கலராக ஒன்றும் போடவில்லையே.
தோ்தலுக்கு முன்பு ஒன்றும் செய்யாதவா்கள் இப்போது அதிகாரத்தில் இல்லாமல் சும்மாவே இருக்கிறாா்கள்.
முதலமைச்சா் ஜோசப் விஜய் – திருச்சியில் தில்லான, திகட்டாத, அசத்தலான அதிரடி பேச்சு.