இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி !!?
தமிழ்நாட்டில் பிறந்து இந்தியாவின் முதல் பெண் டாக்டர் ஆக தேசப்பணியில் சமூக அக்கறையுடன் சீர்திருத்த முனைப்புகளை செய்த இந்திய விடுதலை போராட்ட வீரர், தியாகி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாள் இன்று.
நம் தேசத்தின் பெருமைமிகு பெண்மணியான இவர் பெண்ணிய விடுதலைக்காக போராடியவர் பொட்டு கட்டும் வழக்கத்தை போராடி ஒழித்தவர். தேவதாசி பெண்களுக்கு விடுதி ஒன்றை துவக்கியவர்.

முதலில் தேவதாசி முறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமே என்று தொடங்கப்பட்ட இந்த விடுதி பிறகு அடைக்கலமும், கல்வியும் தேவைப்படும் எல்லாப் பெண்களுக்கும் என்று விரிவுபடுத்தி மாற்றப்பட்டது.
புற்றுநோயால் இறந்த தமது சகோதரி மூலம் அந்த நோய் தரும் துன்பம், வலி, வேதனை ஆகியவற்றை நேருக்கு நேர் பார்த்திருந்த டாக்டர் முத்துலட்சுமி, புற்றுநோய்க்கு என்று ஒரு மருத்துவமனை கட்ட உறுதி எடுத்தார்.

நல்லுள்ளம் கொண்டவர்களிடம் நிதி திரட்டியும், இந்தியப் பெண்கள் சங்கத்தின் உதவியோடும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிறுவினார்.
மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனைக்குப் பிறகு இந்தியாவிலேயே புற்றுநோய்க்காக உருவாக்கப்பட்ட இரண்டாவது சிறப்பு மருத்துவமனை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை.