4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு ! 81 வயது முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை !!?
திருநெல்வேலி மாவட்டத்தில் 4 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 81 வயதான கணபதி என்பவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் (ஜூலை 28)
தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக முதலில் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு, பின்னர் வழக்கு சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தார்.
வழக்கு நான்கு மாதங்களுக்குள் விரைவாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை சிறப்பாக கையாண்ட காவல் அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள், தலைமை காவலர் மற்றும் அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் தீவிர நடவடிக்கையால், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 15 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நங்கூரம் மீடியா நெட்வொர்க்கின் பகுப்பாய்வு.
சிறு குழந்தை என்று பாராமல் சிதைக்க நினைக்கும் இவரை போன்ற சிந்தனை உள்ளவர்களுக்கு ஆயுள் தண்டனை என்பது இவர் செய்த செயலுக்கான தண்டனை என்று எடுத்துக் கொள்ள முடியாது. இவர் செய்த செயலுக்கு மரண தண்டனையே மிகச் சரியானதாக இருக்கட்டும்.
காரணம் என்னவென்றால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டாலும் வேறு எங்கு இருக்கிறார்களோ அங்கெல்லாம் பெண்களின் மேல் இவர்களின் கண்களும் மனமும் வேறு கோணத்தில் தானே இருந்து கொண்டே இருக்கும். ஆகவே, இவரை போன்றவர்களுக்கு மரண தண்டனையை மகத்தான தண்டனையாக இருக்கும்.