ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்தும் முயற்சி ! தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் கண்டன அறிக்கை !!?
ஊடகச் சுதந்திரத்தை அச்சுறுத்தும் எந்த முயற்சியையும் தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது!
சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியம், ஆலமரத்துப்பட்டி கிராமம், ஏழரைமத்திக்காடு அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை செய்தியாக வெளிக்கொணர்ந்த ‘விடியல் முரசு’ பத்திரிகை ஆசிரியர் திரு. சரவணன் மீது பழிவாங்கும் நோக்கில் காவல் நிலையத்தில் புகார் அளித்து மிரட்டும் நடவடிக்கை ஜனநாயகத்திற்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும், ஊடகச் சுதந்திரத்திற்கும் எதிரானது.
உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பத்திரிகையாளர்களை மிரட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
எனவே, சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, பத்திரிகையாளர் மீது அளிக்கப்பட்ட பழிவாங்கும் புகாரை கைவிட்டு, முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
ஊடகச் சுதந்திரம் காக்கப்பட வேண்டும்!
உண்மையை எழுதும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்!
இப்படிக்கு,
எஸ்.ஆர். ஞானசேகர்
மாநில துணைச் செயலாளர்
தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம்,
சேலம் மாவட்டம்,
ஊடக சுதந்திரம் தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் கண்டன அறிக்கை .