மத போதனைகள் என்ற பெயரில் 4 சிறுமிகளை சீரழித்த , காம போதகருக்கு 4 மரண தண்டனை !!?

by ஆசிரியர்
Reading Mode

மத போதனைகள் என்ற பெயரில் 4 சிறுமிகளை
சீரழித்த காம போதகருக்கு 4 மரண தண்டனை !!?

திருநெல்வேலி அருகே மத போதனைகள் என்ற பெயரில் 4 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், மத போதகருக்கு தூக்கு தண்டனைகள் விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே மேல இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம் (வயது 50). இவர் அப்பகுதியில் மத போதகராக இருந்து வந்தார். கொரோனா ஊரடங்கு காலத்தில் மத போதனைகள் செய்வதற்காக வெளியூர்களுக்கு சென்றார்.

அந்த காலகட்டத்தில் பள்ளிகள் விடுமுறை என்பதால், மதபோதனை பிரசங்கத்திற்காக சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை மதபோதகர் ஆபிரகாமுடன் வெளியூர் அனுப்பி வைத்தனர்.

அப்படிச் சென்றவர்களில் சகோதரிகளான 13, 12, 8 வயதுடைய 3 சிறுமிகளை அவர் தனித்தனியாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவதாக அந்த சிறுமிகளை அவர் மிரட்டினார். இதனால் பயந்துபோன சிறுமிகள் வெளியே சொல்லாமல் இருந்தனர்.

இவர்களைப் போலவே அந்த சிறுமிகளின் உறவினர் வீட்டு 8 வயது சிறுமியும் மதபோதனைக்கு சென்றபோது, ஆபிரகாம் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் தேவர்குளம் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன் பிறகே அந்த மத போதகர் சிறுமிகளை சேலம் உள்ளிட்ட வெளியூர்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும், மிரட்டல் விடுத்ததும் வெளியே வந்தது. இதையடுத்து மதபோதகர் ஆபிரகாம் மீது கடந்த 2022 ஜூலை 5ம் தேதி இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீசார் குற்றப்பத்திரிகையை நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். தொடர்ந்து நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி சுரேஷ்குமார், 4 பிஞ்சு குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்த குற்றவாளி ஆபிரகாமுக்கு, ஒவ்வொரு சிறுமியை வன்கொடுமை செய்ததற்கும் தலா ஒரு தூக்கு தண்டனை வீதம் 4 தூக்கு தண்டனைகள் விதித்து நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தார்.

மேலும், ரூ.52 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கு தலா ரூ. 10 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00