4
Reading Mode
திருமாவளவன் தமிழ்நாட்டின் துணை முதல்வராக வேண்டும் – விசிக கூட்டத்தில் தீர்மானம் !
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிட வேண்டும் என்றும், தவெக ஆட்சியில் அவர் துணை முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற விசிக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று திருமாவளவன் திட்டவட்டமாக அறிவித்திருந்த நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் தற்போது இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Customize Text:
Font Color: