முதல்வர் விஜய்யின் அதிரடி – அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு !? ஏன் ? எதனால் !!?

by ஆசிரியர்
Reading Mode

முதல்வர் விஜய்யின் அதிரடி – அமைச்சர்கள் புதிய கோப்புகளில் கையெழுத்திடகூடாது என்ன உத்தரவு !!?

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், தனது அமைச்சரவையில் புதிதாகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் கூட்டணிக் கட்சி அமைச்சர்களுக்கு அதிரடியான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

இதன்படி, புதிய அமைச்சர்கள் யாரும் அடுத்த 6 மாதங்களுக்குப் புதிய திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான முக்கியக் கோப்புகளில் (Fresh Files) தன்னிச்சையாகக் கையெழுத்திடக் கூடாது என்று கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதைத் தனது முதன்மைக் கொள்கையாகக் கொண்டுள்ள முதல்வர் விஜய், அவசரக் கோலத்திலோ அல்லது முறைகேடான வகையிலோ எந்தவொரு புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாவதைத் தடுக்கவே இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அரசின் நிர்வாக நடைமுறைகளை அமைச்சர்கள் முழுமையாகப் புரிந்துகொள்ள அவகாசம் அளிக்கும் வகையிலும், கடந்த காலங்களில் நிலவிய ஊழல் ஒப்பந்த கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவுமே இந்த 6 மாதக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வரின் இந்த அதிரடி உத்தரவு, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00