ஊர்க்காவல் கண்காணிப்பு காவலர்கள் மூலம் செயல்படுத்தப்படும்,,173(2) FIR – உங்கள் உரிமை திட்டம்..
கடந்த குடியரசு தினத்தன்று, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். ஸ்டாலின் IPS அவர்கள், பொதுமக்களின் சட்ட உரிமைகளை உறுதி செய்யும் நோக்கில் 173(2) FIR – உங்கள் உரிமை திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
இந்த திட்டத்தின் மூலம், புகார் அளித்தவர்களுக்கு அவர்களின் FIR-இன் அசல் நகல் இலவசமாக வழங்கப்படுகிறது.
கிராமங்களில் நியமிக்கப்பட்டுள்ள ஊர் காவல் கண்காணிப்பு திட்ட காவலர்கள் மூலம், புகார்தாரர்களின் இல்லத்திற்கே FIR நகல் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
FIR இலவசமாக பெறுவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் Public Feedback Centre எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
காவல்துறையும் பொதுமக்களும் இடையிலான இடைவெளியை குறைத்து,கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும்,
புகார்தாரர்களின் சட்ட உரிமையை பாதுகாக்கவும் இந்தத் திட்டம் முக்கிய பங்காற்றுகிறது.