ஒரே நாளில் பள்ளிகூடம் செல்லாமல் இடைநின்ற 8 மாணவர்களின் மனங்களை மாற்றி பள்ளிக்கூடம் சேர்த்த ,
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். ஸ்டாலின் IPS அவர்களின் நிமிர் (The Rising Team)
கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து காத்து போக்சோ குற்றங்கள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் உருவாக்கப்பட்டது தான் நிமிர் (The Rising team)

நிமிர் தற்போது விரிவடைந்து
குழந்தை திருமணங்களை தடுத்தல்.
தற்கொலை முயற்சிகளை தடுத்தல்.
பள்ளி இடைநிற்றலை தடுத்தல் .
ஆதரவற்ற முதியோர்கள் புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்தல்.
குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்கள் நடைபெறாமல் தடுத்தல் போன்ற பல்வேறு மக்கள் நல பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக ஒரே நாளில் மட்டும் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பள்ளிக்கூடங்களுக்கு செல்லாமல் வேலைக்கும் வேறு சில பணிகளையும் மேற்கொண்ட 8 மாணவ மாணவியரை பள்ளியில் சேர்த்தது இந்த நிமிர் குழு.
தெங்கம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மதுசூதனபுரத்தை சேர்ந்த 14 வயது மாணவன்.

வெட்டுமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் பட்டவிளையை சேர்ந்த 17 வயது மாணவன்.
ஏற்றக்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் வீயனூரை சேர்ந்த 17 வயது மாணவன்.
திக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் பணவிளையை சேர்ந்த 16 வயது மாணவன்.
கடையாலமூடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது மாணவன்.
லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி.
பிலிப் CBSE பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன்.
கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் இந்த நிமிர் குழுவிற்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.