திருப்பூரில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் ! அடங்க மறுத்து அத்து மீறிய விஏஓ லஞ்ச ஒழிப்பில் தஞ்சம் !!?
22வது நாளில் மீண்டும் வி.ஏ.ஓ. கைது
திருப்பூரில் பட்டா பெயர் மாறுதலுக்கு லஞ்சம் வி.ஏ.ஓ. கைது. கரைபுரண்டு ஓடுகிறது லஞ்சம் !அடங்க மறுத்து அத்து மீறுகின்றனர்.
நெருபெரிச்சலிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தனும்.திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தொட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலராக இருந்த ஞானசேகரன் கடந்த 15ஆம் தேதி லஞ்சம் வாங்கி சிறைக்கு சென்றார். அவருக்கு பதிலாக பொறுப்பு அலுவலராக நாசர் அப்துல் ரகுமான் என்பவர் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் பட்டா பெயர் மாறுதலுக்காக ரூ.5ஆயிரத்தை நாசர் அப்துல் ரகுமான் லஞ்சமாக பெற்ற போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
விசாரணைக்கு பின்னர் நாசர் அப்துல் ரகுமானை கைது செய்து சிறைக்கு அழைத்துச் சென்றனர். மீண்டும் மீண்டும் அதே அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி இன்னொரு விஏஓ கைது செய்யப்பட்டுள்ளது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.