பணி ஓய்வு பெற இருக்கும் காவர்களை பாராட்டி, வாழ்த்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் !?
காவல் பணியில் தங்கள் ஈடுபாடும், ஒழுக்கமும் எதிர்கால காவல் அதிகாரிகளுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமையும் என பாராட்டு.
காவல்துறையில் பணிபுரிந்து இந்த மாத இறுதியில் ஓய்வில் செல்லவிருக்கும் உதவி ஆய்வாளர் திரு. ராஜாங்கப் பெருமாள் மற்றும் தலைமை காவலர் திரு. பொன் அருள் ஜோதி அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். ஸ்டாலின் IPS அவர்களுடன் கலந்துரையாடினார்.
அதன்படி பணியில் சிறப்பாக செயல்பட்டு தங்களது பணியை நிறைவு செய்யும் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரை பாராட்டி சான்றிதழ் மற்றும் வாழ்த்து மடல் வழங்கி கௌரவித்தார்கள்.