தூத்துக்குடியில் குற்றம் சம்பந்தப்பட்ட பல வழக்குகளில் தொடர்புடையவரை விரட்டி பிடித்த போக்குவரத்து தலைமை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் கடந்த 18ம் தேதி இரவு மத்திய போக்குவரத்து தலைமை காவலர் ஞானமுத்து குரூஸ்ரனாந்த் சிலை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவரை விசாரணை மேற்கொண்டதில் அவர் தப்பிச் சென்றுள்ளார்.
உடனே துரிதமாக செயல்பட்ட தலைமை காவலர்,அவரை துரத்தி பிடித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். குற்றவாளி தப்பித்து சென்ற போது தனி ஆளாக துரத்திச் சென்று அவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்து தன் பணியை துணிச்சலுடன், செவ்வனே செய்த தலைமை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார். தனியாக துணிச்சலுடன் செயல்பட்ட தலைமை காவலரை நாமும் பாராட்டுவோம்.