இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ! அவரின் பின்னணியும் !!?

by ஆசிரியர்
Reading Mode

இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரும், அவரின் பின்னணியும் !!?

சமையல் வேலை செய்யும் தாய் – பூசாரி பணியில் தந்தை.. ரமேஷின் பின்னணி

முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் 31 வயது நிரம்பிய பிராமணர் சமுதாயத்தை சேர்ந்த ரமேஷ் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் அவர் அமைச்சரானாலும் கூட அவரது தந்தை மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் சென்னை கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வருவதும், அவரது தாய் சமையல் வேலைக்காக தினமும் மறைமலை நகரில் இருந்து மயிலாப்பூருக்கு 90 கிலோமீட்டர் தொலைவு பயணித்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் ரமேஷ். இவர் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ரமேஷ் பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

இன்ஜினியரிங் படிப்பை முடித்த இவர் விஜய்யின் தீவிர ரசிகராக இருந்தார். இளம் வயதிலேயே விஜய்யின் மக்கள் இயக்கத்தில் பயணிக்க தொடங்கினார். இந்நிலையில் தான் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவருக்கு விஜய் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவியை வழங்கி உள்ளார்.

கடந்த 4ஆம் தேதி ஸ்ரீரங்கம் தொகுதியில் வென்ற ரமேஷ் கடந்த 21ஆம் தேதி அமைச்சரானார். ஆனாலும் கூட அவரது தந்தை – தாய் ஆகியோர் தாங்கள் செயயும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மகன் அமைச்சராகிவிட்டார் என்று தங்களின் பணியை விட்டுவிட வில்லை. அதாவது அமைச்சர் ரமேஷின் தந்தை பெயர் கே.சீனிவாசன். (வயது 65). தாய் பெயர் சுமதி. (வயது 55). இவர்கள் செங்கல்பட்டு அருகே உள்ள மறைமலை நகரில் வசித்து வருகின்றனர்.

தந்தை சீனிவாசன் அங்குள்ள சிவன் விஷ்ணு கோவிலில் அர்ச்சகராக உள்ளார். மாத சம்பளமாக ரூ.5 ஆயிரம் பெற்று வருகிறார்.இவர் முதலில் ரூ.300 சம்பளம் வாங்கினார். பிறகு ரூ.1000, ரூ.3 ஆயிரம் என்று உயர்ந்து தற்போது ரூ.5 ஆயிரம் வாங்கி வருகிறார். தாய் சுமதி மயிலாப்பூரில் வீடுகளுக்கு சென்று சமையல் வேலை செய்து வருகிறார். தினமும் 90 கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்து அவர் சமையல் வேலை செய்து வருகிறார். மகன் ரமேஷ் அமைச்சரானாலும் கூட அவரது பெற்றோர் தொடர்ந்து தங்களின் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபற்றி ரமேஷின் தந்தை சீனிவாசன் கூறுகையில், “என் மகன் விஜய்யின் தீவிர ரசிகன் என்பது எனக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும். மிக இளம் வயதிலேயே விஜய் மக்கள் இயக்கத்தில் சேர்ந்தார். ஆனந்த்திடம் (தவெக பொதுச் செயலாளர்) நல்ல பெயர் பெற்றார். ஆனந்த்தின் விருப்பமான நபர்களில் ஒருவராக என் மகன் உள்ளது எனக்கு தெரியும்.

நான் மாதம் ரூ.5,000 சம்பளம் வாங்கி வருகிறேன். என் மனைவி குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய தினமும் மயிலாப்பூருக்கு சமையல் வேலைக்கு செல்கிறார். எங்கள் வருமானத்தில் ரமேஷை பி.இ. பட்டப்படிப்பை முடிக்க மட்டுமே முடிந்தது. மற்ற இரண்டு மகன்கள் டிப்ளமோ வரை மட்டுமே படித்தனர்.

எனது குடும்பம் குறைந்த வசதிகளுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறது. குறைந்த சம்பளத்தில் குடும்பம் நடத்துவது கஷ்டமாக இருந்தது. அதனை கடந்து தான் வாழ்க்கை நடத்தி வருகிறோம். எங்கள் குடும்பத்தில் ஒருவர் ஒருநாள் அமைச்சராகப் பதவியேற்பார் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. முதலமைச்சர் விஜய்யின் ஆசீர்வாதத்தால் என் மகன் அமைச்சராக இருக்கிறான்” என்று பூரித்தபடி கூறினார்.

அமைச்சர் ரமேஷின் தந்தை சீனிவாசனின் பூர்வீகம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரம் கிராமம் ஆகும். அவர் அங்கிருந்து கடந்த 1995-ல் சென்னைக்கு குடிபெயர்ந்தார். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ அனந்த விஜயகர் ஆலய சங்கம் என்ற தனியார் அறக்கட்டளையின் கீழ் மறைமலை நகரில் செயல்பட்டு வரும் கோவிலில் அர்ச்சகராக பணிக்கு சென்றார். கோவில் அருகே உள்ள வீட்டின் ஒரு தளத்தில் குடும்பத்துடன் இலவசமாக தங்கினார். சீனிவாசன் – சுமதி தம்பதிக்கு 3 மகன்கள்.

மூத்த மகன் பெயர் சுதர்சன் (வயது 37) இவர் தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக .உள்ளார். இளைய மகன் எஸ் .அரவிந்த்தின் (வயது 29.) இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இந்த தம்பதிக்கு 2வது மகனாகப் பிறந்த ரமேஷ் முதலில் மகன், அறநிலைய அமைச்சர்.. ஆனாலும் சமையல் வேலை செய்யும் தாய் – பூசாரி பணியில் தந்தை.. இவர்களின் செயல்பாடுகளை கண்டு மக்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00