கல்லாக்கட்டும் RTO அலுவலகம்!கொடி கட்டி பறக்கும் லஞ்சம் ஊழல் முறைகேடு! கண்டுகொள்ளாத உயர் அதிகாரிகள்!!? மோட்டார் வாகன ஆய்வாளர் இல்லாமல் வாகனங்களுக்கு சட்டவிரோதமாக உரிமம் புதுப்பித்து அனுப்பும் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக உதவியாளர். நடவடிக்கை எடுக்காமல் கோமாவில் படுத்து உறங்கும் உயர் அதிகாரிகள்!
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில்மோட்டார் வாகன ஆய்வாளராக இருந்து வருகிறார் சிவக்குமார்.இவர் மோட்டார் வாகன அலுவலகத்திற்கு எப்போது வருவார் என்றும் எப்போது எங்கு போவார் என்றும் யாருக்கும் தெரியாது.மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு வரும் இருசக்கர வாகனம் முதல் பல சக்கர வாகனம் வரை என அனைத்து வாகனங்களின் உரிமம் மற்றும் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமம் என அனைத்து பணிகளையும் இடைத் தரகர்களை வைத்து அலுவலக உதவியாளராக இருக்கும் கார்த்திக் என்பவர் வசூல் வேட்டை செய்து கவனித்துக் கொள்கிறார்.
இலுப்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், கார்த்திக் இல்லாமல் எந்த ஒரு வேலையும் நடக்காது என, அங்கு வரக்கூடிய பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள், ஆணித்தரமாக குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒரு வாடகை வாகனத்தில் உரிமம் புதுப்பிக்க,
01) படிவம் 25
பதிவுச் சான்றிதழ்
02) ஆர்.சி கையேடு
03) வாகனத்தில் உள்ள பிரேக், கிளட்ச்,ஹெட் லைட்,இன்டிகேட்டர் , இன்ஜினிலிருந்து வரும் புகையின் தன்மை (pollution), மற்றும் வாகனத்தின் உறுதித்தன்மை என அனைத்தும் சரி செய்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
04) பி.யூ.சி.
புதுப்பிக்கப்பட்ட சாலை வரி செலுத்துதலுக்கான சான்று.
05) உரிமையாளரின் கையொப்ப அடையாளம்.
06) இயந்திர எண்,சேசிஸ் எண் ஆகியவைகளின் பென்சில் அச்சு.
07) வாகன காப்பீட்டு சான்றிதழ்.
08) படிவம் 60 அல்லது 61.
பான் கார்டு நகல்,
முகவரிச் சான்று இவை அனைத்தும் சரியாக இருக்கிறதா!? என்று வரிசையாக கவனித்து,காலாவதி தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் புதுப்பித்தல் செய்யப்பட வேண்டும் என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989, விதி 81 இன் வழிகாட்டுதல்களின்படி,நீங்கள் செலுத்த வேண்டிய வாகன வரிகள் மற்றும் அபராதங்களையும் செலுத்தப்பட்டுள்ளதா என மோட்டார் வாகன ஆய்வாளர் சரிபார்த்த பின்பு தான் வாகனங்களுக்கு உரிமம் புதுப்பிக்க வேண்டும்.

ஆனால் மோட்டார் வாகன சட்ட விதிகளை காற்றில் பறக்கவிட்டு இலுப்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உரிமம் புதுப்பிக்க வரும் இரு சக்கர வாகனம் முதல் 16 சக்கர வாகனம் என வரும் அனைத்து வாகனங்களுக்கும் ஏற்றவாறு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து எந்த ஒரு ஆவணங்களையும் சரிபார்க்காமல் இடைத்தரகர்கள் மூலம் இலுப்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக உள்ள கார்த்திக் என்பவரை வைத்து ஒரு வாகனத்துக்கு சுமார் ரூபாய் 10,000 /- முதல் 25,000 /- வரை என மாதம் சுமார் ஐந்து லட்சத்திற்கு குறைவில்லாமல் கல்லா கட்டுகின்றனர். லஞ்சமாக வசூல் செய்யும் பணத்தில் இலுப்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகிய இருவருக்கும்,வசூல் செய்த லஞ்ச லாவண்யப் பணத்தில், சொன்ன நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் பிரித்துக் கொடுத்து இலுப்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நிழல் மோட்டார் வாகன ஆய்வாளராக கார்த்திக் வலம் வருகிறார் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான முறையில் குற்றம் சாற்றியுள்ளனர்.எது எப்படியோ மோட்டார் வாகன ஆய்வாளர் இல்லாமல் வாகனங்களுக்கு உரிமம் புதுப்பித்து அனுப்பும் சட்டவிரோத செயலை செய்து வரும் இலுப்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக உதவியாளர் கார்த்திக்,மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகிய மூன்று பேர் மீது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும்,
சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்படி குற்றத்தை கருத்தில் கொண்டு மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து இதற்கான அலுவலக நடவடிக்கைகளை உயர் அதிகாரிகள் எடுப்பார்களா? லஞ்சம் வாங்கிய அலுவலர்கள் தண்டிக்கப்படுவார்களா?? என்றும் பொறுத்திருந்து பார்ப்போம்.