வாலாஜாபேட்டை காவல் ஆய்வாளர் சாலமன் ராஜாவுக்கு சிறந்த காவல் நிலையத்திற்கான விருது!!

by ஆசிரியர்
Reading Mode

வாலாஜாபேட்டை காவல் ஆய்வாளர் சாலமன் ராஜாவுக்கு, ‘தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது!

தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது
பெற்ற ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை காவல் நிலையம் ஆய்வாளர் சாலமன் ராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வாழ்த்து தமிழ்நாடு அரசு, மாவட்ட / மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையங்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து “தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு” வழங்கி வருகிறது. அதன்படி, கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டது.

இதற்கான விருதை, காவல் நிலையம் சார்பாக ஆற்காடு கிராமிய காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா, கடந்த 06.09.2025 அன்று சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) வெங்கட்ராமன், ஐபிஎஸ்., அவர்களிடம் விருதினை பெற்றார்.

மேற்கண்ட ஆற்காடு கிராமிய காவல் ஆய்வாளர் சாலமன் ராஜாவை, ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் , ஐபிஎஸ்., பாராட்டி எப்போதும் சிறந்த காவல் நிலையமாக விளங்க வேண்டும் என வாழ்த்தினார். அப்போது, ராணிப்பேட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இமயவர்மன் உடனிருந்தார்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00