மாவட்ட எஸ்பி.அய்மன் ஜமால் ஐபிஎஸ் அதிரடி!? குற்றத் தடுப்பு நடவடிக்கையாக நகரும் சோதனைச் சாவடி!?

by ஆசிரியர்
Reading Mode

ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் நகரும் சோதனைச் சாவடி!! ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று திறந்து வைப்பு!

ராணிப்பேட்டை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், ஐபிஎஸ்., அவர்களின் உத்தரவின்படி அரக்கோணம் உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் Y. ஜாபர் சித்திக் முயற்சியில், அரக்கோணம் உட்கோட்ட பகுதிகளில் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக “நகரும் சோதனைச் சாவடி” ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜெ. யு. சந்திரகலா, ஐஏஎஸ்., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இணைந்து ரிப்பனை கட் செய்து துவக்கி வைத்தனர்.

இந்த சோதனைச் சாவடியானது பல்வேறு பிரத்தியேக கருவிகள் கொண்டு அமைந்துள்ளது. இணைய வழி கண்காணிப்பு கேமிராக்கள், புலன் விசாரணை மென்பொருள் கருவிகள், தடய அறிவியல் கருவிகள், செல்போன் ஆய்வு மென்பொருள் கருவி என புலன் விசாரணைக்கு தேவையான அனைத்து அடிப்படை கருவிகளை உள்ளடக்கிய இன்வெஸ்டிகேஷன் யூனிட் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளில் சட்டம் – ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர தேவையான லத்தி, கிரவுட் கண்ட்ரோல் ரோப், கிரவுட் மேனேஜ்மென்ட் பேரிகேட்ஸ், சர்ச்லைட், வார்னிங்லைட், பிரேக்கர், லேடர் என அசாதாரண நிலைகளில் பொதுமக்களை பாதுகாக்க தேவையான அனைத்து கருவிகளும் உள்ளடக்கிய கண்ட்ரோல் யூனிட் ஒன்றும் உள்ளது. மேலும், காவலர்கள் ஓய்வெடுப்பதற்காக லைட் பெட் மற்றும் தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த நகரும் சோதனை சாவடியானது தேவைக்கேற்ப பல்வேறு கிராமங்களில் முகாமிட்டு அசாதாரண பிரச்சினைகளை கையாளுவதற்கும் சம்பவம் நடந்த இடத்திலேயே புலன் விசாரணை மேற்கொள்ள மிகவும் பயனுள்ளதாக அமையும்.இந்நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக அரக்கோணம் உட்கோட்ட பகுதிகளில் காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 10 லட்சம் மதிப்புடைய 54 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல் உதவி செயலி குறித்த‌ விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இணைந்து கையொப்பமிட்டு விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் சந்திரகுமார், அரக்கோணம் கிராமிய காவல் ஆய்வாளர் சிவகுமார், அரக்கோணம் வட்டாட்சியர் வெங்கடேசன், அரக்கோணம் நகராட்சி ஆணையர் ஆனந்தன், பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00