உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் செங்கோட்டையன் ! அப்படி என்னதான் சொன்னார் !!?
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் “அந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி தரவில்லை, இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை, கேட்ட நிதியை ஒதுக்கவில்லை” என்று மத்திய அரசை குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்து தமிழகத்தின் நலனை திமுக காற்றில் பறக்க விட்டுவிட்டது கடந்த ஐந்து வருடங்களாக.
ஆனால் இன்று உண்மை நிலையை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் எடுத்துரைப்பது வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் எதிர்வரும் பருவமழைக் காலங்களில் சீரமைப்பு பணிகளுக்கு பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ.1000 கோடி நிதியை விடுவித்திருப்பதாகவும், நான் கேட்ட நிதியை முன்னெச்சரிக்கையாகவே மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கி தந்துள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடையே கூறி இருக்கிறார்.
மத்திய பா.ஜ.க அரசு மீதான வெறுப்பு அரசியலையே விதைத்து தமிழக மக்களிடம் பழக்கப்படுத்திய திமுக – வின் உண்மை முகத்தை தமிழக மக்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள். தமிழகத்திற்கு கேட்ட போதெல்லாம் நிதியை வாரி வழங்கி முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது மத்திய அரசு.
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கிய உண்மையை உரக்கச் சொன்ன அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.