இயக்குனர், திரைக்கதை மன்னர் பாக்யராஜ் விடை பெற்றார்!!!

by ஆசிரியர்
Reading Mode

இயக்குனர், திரைக்கதை மன்னர் பாக்யராஜ் விடை பெற்றார்!!!

தமிழ் சினிமாவே அழுகிறது.

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் (வயது 73) மாரடைப்பு காரணமாக காலமானார்.

இன்று காலை (27/06/2026) மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

இயக்குனர், திரைக்கதை மன்னர் பாக்யராஜ் அவர்களின் மறைவிற்கு நங்கூரம் மீடியா நெட்வொர்க் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

திரைக்கதை மன்னன் K. பாக்யராஜின் சாதனைப் பயணம்!

தமிழ் சினிமாவில் எதார்த்தமான நகைச்சுவை, விறுவிறுப்பான திரைக்கதை மூலம் ரசிகர்களைக் கட்டிப்போட்ட ‘திரைக்கதை மன்னன்’ K. பாக்யராஜ் அவர்களின் முக்கியத் திரைப்படங்களின் தொகுப்பு:
ஆரம்ப கால வெற்றிகள் (1979 – 1980):
சுவரில்லாத சித்திரங்கள் (1979): இயக்குனராக அறிமுகமான முதல் படம்.

ஒரு கை ஓசை (1980): வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்து முத்திரை பதித்த படம்.

திரைக்கதை மன்னனின் பொற்காலம் (1981 – 1985):
மௌன கீதங்கள் & இன்று போய் நாளை வா (1981): குடும்ப உறவுகளையும், எக்காலத்திற்குமான நகைச்சுவையையும் தந்த காவியங்கள்.

அந்த 7 நாட்கள் (1981): “பாலக்காட்டு மாதவன்” கதாபாத்திரம் மூலம் தமிழ் நெஞ்சங்களில் இடம்பிடித்த படம்.

தூறல் நின்னு போச்சு (1982) & முந்தானை முடிச்சு (1983): தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த மெகா ஹிட் திரைப்படங்கள்.

சின்ன வீடு (1985): பாக்யராஜின் டிரேட்மார்க் நகைச்சுவை மற்றும் குடும்பக் கதை.

மெகா ஹிட் தொடர்ச்சி & இறுதியாக (1990கள் – 2010):

ராசுக்குட்டி (1992) & வீட்ல விசேஷங்க (1994): செண்டிமெண்ட் மற்றும் காமெடி கலந்த மாபெரும் வெற்றிப் படங்கள்.

பாரிஜாதம் (2006) & சித்து +2 (2010): 2000-க்குப் பின் அவர் இயக்கத்தில் வெளிவந்த முக்கியத் திரைப்படங்கள்.

இயக்குனர் பாரதிராஜாவின் ‘புதிய வார்ப்புகள்’ (1979) படத்தில் வசனகர்த்தாவாகவும், ஹீரோவாகவும் அறிமுகமான இவர் இயக்கம், திரைக்கதை, வசனம், நடிப்பு, இசை என பன்முகத் திறமை கொண்டவர்.

திரைக்கதை எழுத நினைக்கும் எவருக்கும் K. பாக்யராஜ் அவர்களின் படங்களே ஆகச்சிறந்த பாடம்!”

இயக்குனர் பாக்யராஜ் அவர்களின் ஆத்மா சிவகதி அடைய அனைவரும் பிரார்த்திப்போமாக.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00