திரைக்கதை பேசும் வரை… பாக்யராஜ் வாழ்ந்துகொண்டே இருப்பார்…
தமிழ் சினிமாவின் திரைக்கதை மொழிக்கு தனி அடையாளம் கொடுத்த மகத்தான படைப்பாளி கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு, திரையுலகிற்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
எளிமையான கதைகளை அசாதாரணமான திரைக்கதைகளாக மாற்றிய மாயக்கலைஞர்.
குடும்ப உறவுகளின் உணர்வுகளை நகைச்சுவையோடும், வாழ்க்கையின் எதார்த்தங்களோடும் மக்களின் மனதில் பதிய வைத்த படைப்பாளர். நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர் என ஒவ்வொரு துறையிலும் தனது முத்திரையைப் பதித்த பன்முகக் கலைஞர்.
“திரைக்கதை மன்னன்” என்ற பெருமை அவருக்குக் கிடைத்த பட்டம் மட்டுமல்ல; அவர் படைத்த ஒவ்வொரு படைப்பும் அதற்கான சான்றாகும்.
குருவான இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களை இழந்த துயரத்திலிருந்து தமிழ் திரையுலகம் இன்னும் மீளாத நிலையில், அவரது முதன்மைச் சீடரான பாக்யராஜ் அவர்களையும் இழந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்கள் மறையலாம்… ஆனால் அவர்கள் படைத்த கலை ஒருபோதும் மறைவதில்லை. தலைமுறைகள் மாறினாலும், கே. பாக்யராஜ் என்ற பெயர் தமிழ் சினிமாவின் வரலாற்றில் என்றும் அழியாத அத்தியாயமாக நிலைத்திருக்கும்.
தமிழ் திரையுலகின் திரைக்கதை மன்னனுக்கு நங்கூரம் மீடியா நெட்வொர்க்கின் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி.
ஓம் சாந்தி.