0
Reading Mode
7000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் இருந்து அகற்றிய ஆராதனா ! பாற்கடல் போல் குவியும் பாராட்டுக்கள் !!
வயது சிறியது ! செயலோ மிகப்பெரியது !! அதன் தாக்கம் கடல் போல் ஆனது!!!
பலர் கடலை ரசிக்க மட்டும் செல்கிறார்கள். ஆனால் சிலர் கடலை பாதுகாக்கவும் முன்வருகிறார்கள்.
சென்னையைச் சேர்ந்த 12 வயது தாரகை ஆராதனா, 100-க்கும் மேற்பட்ட Scuba Dive பயணங்களில் பங்கேற்று, கடலில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கைவிடப்பட்ட மீன்பிடி வலைகளை அகற்றும் முயற்சியில் பங்காற்றியுள்ளார்.
சுற்றுச்சூழலை காப்பது பெரியவர்களின் பொறுப்பு மட்டுமல்ல என்பதை, தனது செயலால் இந்த சிறுமி நிரூபித்துள்ளார்.
இன்றைய செயல்…
நாளைய கடலின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.
இளம் தலைமுறையின் இந்த முயற்சியை நாம் அனைவரும் கடைப்பிடித்து பாராட்டுவோமாக.
Customize Text:
Font Color: