பாரதிராஜா காலமானார் !இயக்குநர் இமயம் சரிந்தது !!?

by ஆசிரியர்
Reading Mode

பாரதிராஜா காலமானார் !இயக்குநர் இமயம் சரிந்தது !!?

“ஒரு மனிதர் மறையலாம்; ஆனால் ஒரு சகாப்தம் மறைவதில்லை. பாரதிராஜா என்ற பெயர் தமிழ் சினிமாவின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் இயக்குநர் இமயம் பாரதிராஜா (வயது 84) உடல் நலக்குறைவால் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் (10/06/2026) நாளில் காலமானார்.

“மண்ணின் மனத்தை திரைப்படங்களில் விதைத்து, கிராமத்து மக்களின் வாழ்க்கையை உலகம் அறியச் செய்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

அவரது படைப்புகள் காலத்தால் அழியாதவை. அவர் உடலால் மறைந்தாலும், அவரது கலை என்றும் உயிருடன் வாழும்.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின்

சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம்.

பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னச்சாமி

1977-ல் வெளியான இவரின் முதல் படமான ’16 வயதினிலே’ வெற்றிப் படமாக அமைந்தது.

முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருது பெற்றார்.

கார்த்திக், பாண்டியன், பாக்யராஜ், ராதா, ராதிகா, ரேவதி உள்ளிட்ட நடிகைகளை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர்.

ஸ்டூடியோவிற்குள் இருந்த சினிமாவை கிராமத்திற்கு அழைத்துச் சென்று வாழ்வியலை காட்டியவர் என்ற பெருமைக்குரியவர்.

பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்,நங்கூரம் மீடியா நெட்வொர்க் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00