கன்னியாகுமரியில் போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி!!!

by ஆசிரியர்
Reading Mode

கன்னியாகுமரியில் போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர்.ஸ்டாலின், அவர்கள் விபத்துகளை குறைக்கும் முன்னெடுப்பாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் Helmet அணிந்தபடி 100 இருசக்கர வாகனங்கள் பங்கு பெற்ற
“No Helmet No Entry” என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


இந்த விழிப்புணர்வுப் பேரணியை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். மேலும் கன்னியாகுமரி போக்குவரத்து ஆய்வாளர் செல்லத்துரை பேரணியில் சிறப்புரை வழங்கினார். இந்த விழிப்புணர்வு பேரணியானது கன்னியாகுமரி ரவுண்டானாவில் இருந்து தொடங்கி விவேகானந்தபுரம், பழத்தோட்டம், மகாதானபுரம் வழியாக ஜீரோங பாயிண்ட் பகுதியில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் காவல்துறையினரும், கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00