காவலர் தினம் ஒரு கொண்டாட்டம் அல்ல ! அது ஒரு கல்வெட்டு !! அடுத்த தலைமுறைக்காக தன் வியர்வையால் எழுதி வைத்த கல்வெட்டு !!!

by ஆசிரியர்
Reading Mode

காவலர் தினம் ஒரு கொண்டாட்டம் அல்ல ! அது ஒரு கல்வெட்டு !! அடுத்த தலைமுறைக்காக தன் வியர்வையால் எழுதி வைத்த கல்வெட்டு !!!
நகரத்தின் நரம்பு!!!

ஆயிரம் வாட்ஸ் விளக்குகள் அணைந்த பின்பும்,
நகரத்தின் இதயத் துடிப்பைக் கண்காணிக்க
சுற்றிக்கொண்டே இருக்கிறது ஒரு செயற்கைக்கோள்…
அதுதான் காவலன்.

அவன் கையில் இருப்பது அறிவியலின் கோபம்.
அவன் நெஞ்சில் துடிப்பது பூமியின் ஈரம்.

களைப்பு என்பது அவன் செல்களில் உறையும் அமிலம்,
கடமை என்பது அவன் ரத்தத்தில் கலந்த ஆக்சிஜன்.

செல்போன் திரையில் அப்பா முகம் தேடும் மகளுக்குத் தெரியாது,
அவன் தேசத்தின் முகவரியைத் தேடிக்கொண்டிருக்கிறான் என்று.

“எப்போது வருவாய்?” என்ற மனைவியின் கேள்விக்கு,
அவன் பணிச் சீருடை மௌனமாய் பதில் சொல்லும்.

ஞாயிறு என்பது காலண்டரில் ஒரு சிவப்பு மை…
அவன் அகராதியில் அதுவும் ஒரு கருப்புப் புள்ளி.

சூரியனின் அனுகதிர்கள் உடலைப் பிளக்க,
வியர்வையின் உப்பை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு
சரித்திரம் நடக்கும் தார்ச்சாலையில் நடக்கிறான்.

அவன் கால்கள் நின்றால், போக்குவரத்து மட்டுமல்ல…
இந்த நாட்டின் நாடித்துடிப்பும் நின்றுவிடும்.

மூளை சிதறும் ஒரு விபத்தில்,
ஆம்புலன்ஸ் வருமுன்னே அவன் விரல்கள் நாடி பார்க்கும்.

சித்தாந்தங்கள் மோதும் கலவரத்தில்,
நியாயத்தின் முதல் காயத்தை அவன்தான் வாங்குவான்.

ஆயிரம் கேமராக்கள் சுழலும் திருவிழாவில்,
எந்த கேமராவிலும் சிக்காத நிஜ நாயகன் அவன்தான்.

தன் பிள்ளையின் அழுகையை போனில் கேட்கும் அவன்,
ஊர்ப் பிள்ளைகளின் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறான்.

மனைவியின் கண்ணீர்…
வாட்ஸ்அப்பில் அனுப்பப்படாத ஒற்றை வரி மெசேஜ்.

அவன் சிந்தும் கண்ணீரோ…
இந்த தேசத்தின் தாகம் தீர்க்க பூமிக்குள் இறங்கும் நிலத்தடி நீர்.

ஒவ்வொரு நாளும் பணி முடிந்து திரும்புகையில்,
உயிரோடு திரும்புவது ஒரு மறுபிறப்பு.

அவன் உடம்பில் உள்ள காயங்கள் யாவும்,
சட்டம் தன் கடமையைச் செய்ததற்கான சாட்சியங்கள்.

தோளில் இருக்கும் அந்த நட்சத்திரங்கள் வெறும் சின்னமல்ல…

கோடிக்கணக்கான மக்களின் தூக்கத்திற்கு அவன் கொடுத்த விலை.

தோழனே,
உன் எலும்பின் மீதுதான் எங்கள் ஜனநாயகம் நிற்கிறது.

உன் வியர்வை ஆவியாகி மழையாவதால் தான்,
எங்கள் வயல்களில் அமைதி விளைகிறது.

காவலர் தினம் ஒரு கொண்டாட்டமல்ல…
அது ஒரு கல்வெட்டு.

ஒரு தலைமுறை, இன்னொரு தலைமுறைக்காக
தன் வியர்வையால் எழுதிவைத்த கல்வெட்டு.

வீட்டை தியாகம் செய்து நாட்டை காக்கும் காவல் தெய்வங்களுக்கு நங்கூரம் மீடியா நெட்வொர்க் ,போலீஸ் விஷன் மீடியாவின் காவலர் தின வாழ்த்துக்கள்.
வாழ்க காவலர்கள்! வளர்க நமது காவல்துறை!!

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00