எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவர் நீதிமன்றத்திற்கு வெளியே உயிருக்கு ஆபத்து என கண்ணீருடன் கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் அருகே உள்ள சிக்கனூர் பகுதியில், அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில், குடிமங்கலம் காவல் நிலையத்தில் நிலையத்தில் பணியாற்ற வந்த எஸ்.எஸ்.ஐ சண்முகவேல், நேற்று முன்தினம் இரவு கொடூரமான முறையில் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் மரப்பாடியை சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் உடுமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அப்போது காவல்துறையினர் அவர்களை சிறைக்கு அழைத்துச் சென்ற போது மூர்த்தி, தங்கபாண்டியன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தின் வெளியில் நின்றிருந்த செய்தியாளர்களை பார்த்து கதறினர். மேலும் அப்போது அவர்கள் ‘எங்கள் உயிருக்கு ஆபத்து’ என்றும் கூச்சலிட்டனர்.
இதனிடையே எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் என்கவுண்டர் செய்யப்பட்டு, அவனது உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. அவனது உடலை அடையாளம் காண்பதற்காக மனைவி சபீனா, 6 வயது மகள், தாய் பச்சையம்மாள், தங்கபாண்டியன் மனைவி புனிதா ஆகியோரை காவல்துறையினர் அழைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து உடுமலை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உமாராணி, உடற்கூறாய்வு நடைபெறும் இடத்திற்கு வந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிந்த பிறகு மணிகண்டனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
குடித்து, கும்மாளம் இட்டு குடும்பத்தில் சண்டை செய்து கொண்ட இவர்களை சமாதானம் செய்து நல்வழிப்படுத்த முயன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அவர்களை கொடூரமாகக் கொன்ற, இத்தகைய கயவர்களை இவர்கள் கத்தினாலும், கதறினாலும், கண்ணீர் விட்டு அழுது புரண்டாலும் இந்த அயோக்கியன்கள் செய்த கொலை குற்றத்திற்கு இவர்களையும் என்கவுண்டர் செய்து தண்டிக்கப்பட்டால் மட்டுமே சட்டத்தை நிலைநாட்டி நீதி வென்றதற்கு சமமாகும். இவர்களைப் போன்ற குற்றவாளிகளுக்கு மன்னிப்பு என்ற பேச்சுக்கு இடம் அளிக்காமல் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டியவர்களும் இவர்களே. இப்படி செய்தால் மட்டுமே குற்றவாளிகள் இல்லாத சிறப்பான மாநிலமாக நம் தமிழகம் விளங்கும். இப்படி நம் தமிழகம் சிறப்பான மாநிலமாக விளங்க வேண்டும் என்றால் காவல்துறைக்கான முழு அங்கீகாரத்தையும், அதிகாரத்தையும் கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும்.