ஜோதிடருக்கு அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக புதிய பதவி!??

by ஆசிரியர்
Reading Mode

யார் இந்த ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் ,அவரின் பின்னணி என்ன பார்ப்போம்!?

ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்

தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்ற பிறகு முக்கிய அரசு அதிகாரிகள் மாற்றப்பட்டும், புதிதாக நியமிக்கப்படும் வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ( political officers on special duty ) ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் விஜய்க்கு நீண்ட காலமாக ஆஸ்தான ஜோதிடராக இருந்து வரும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் கட்சியின் முக்கிய முடிவுகளில் திரை மறைவில் இருந்து பங்காற்றி வந்ததாக கூறப்படுகிறது.

தவெகவின் செய்தி தொடர்பாளராகவும் இருந்து வந்துள்ளார். இவருக்கு இப்போது நேரடியாகவே அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

விஜயின் ஆஸ்த்தான ஜோதிடர் ஆன இவர் ராஜராஜ சோழன், சேரன் செங்குட்டுவன், அசோகச் சக்கரவர்த்தி ஆட்சியைப் பார்த்திருக்க மாட்டீர்கள் ஆனால், விஜய் சக்கரவர்த்தியின் ஆட்சியைப் பார்ப்பீர்கள்.

அவர் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவார் பொறுத்திருந்து பாருங்கள் என்று சொன்னவர். அதோடு இந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் முதல் வர் ஆவது உறுதி என்று அடித்துக் கூறியவர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இவர்தான் ஆஸ்த்தான ஜோதிடராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயின் வெற்றியை மிகத் துல்லியமாக கணித்த ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் அவர்களுக்கு இப்போது அரசுப் பதவி கிடைத்துள்ளது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00