மக்களோடு நின்றவர் யார் ? தவிக்கவிட்டுச் சென்றவர் யார் ? என்று மக்களுக்குத் தெரியும் ! கனிமொழி பதில்!!
கரூர் சம்பவத்தின்போது மக்களோடு நின்றவர்கள் யார், தவிக்கவிட்டுச் சென்றவர்கள் யார் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்று முதல்வர் விஜயின் கருத்துக்கு கனிமொழி எம்பி மக்களோடு நின்றவர் யார் ? தவிக்கவிட்டுச் சென்றவர் யார் ? என்று மக்களுக்குத் தெரியும் ! என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 32 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் விஜய் அரசு பணி ஆணை வழங்க உள்ள நிலையில், கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், கரூர் சம்பவம் தொடர்பாகத் தி.மு.க. அரசையும் காவல்துறையையும் கடுமையாகச் சாடினார்.

கூட்டம் அதிகமாக இருப்பது குறித்து கரூர் போலீசார் தங்களை எச்சரித்திருக்கலாம் அல்லது தங்களைக் கேட்காமலேயே கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம் என்றும், அவ்வாறு செய்யாமல் நெடுஞ்சாலையிலிருந்து போலீசாரே தங்களை உள்ளே கூட்டிட்டு வந்து நாடகம் நடத்தியதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், கரூர் போலீசாரை முழுமையாக நம்பித்தான் நன்றி தெரிவித்ததாகவும், இப்படியொரு நாடகம் நடக்கும் என்று தனக்குத் தெரியாது என்றும் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டார்.

கனிமொழி எம்பி அளித்த பதிலடி:
முதலமைச்சர் விஜய்யின் இந்த உரை குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது தி.மு.க. எம்பி கனிமொழி அதற்குப் பதிலளித்தார். அவர் கூறுகையில், “எல்லோருக்குமே அவரவர்க்குரிய பொறுப்பு என்று ஒன்று இருக்கிறது; அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்துத் தற்போது விரிவாகச் சொல்ல விரும்பவில்லை.
ஏனெனில், இந்த விவகாரம் தற்போது அதிகாரப்பூர்வ விசாரணையில் இருக்கக்கூடிய விஷயம் என்பதால், பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியாக அதுகுறித்து நான் பேசாமல் இருப்பது நல்லது என நினைக்கிறேன். ஆனால், அந்த விபத்து நேரிட்ட நேரத்தில் கூட மக்களோடு நின்று உதவியவர்கள் யார், தவிக்கவிட்டு அங்கிருந்து சென்றவர்கள் யார் என்பது கரூர் மக்களுக்கு நன்றாகவே தெரியும்” என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.