30 ஆண்டு காலமாக, 300 ஸ்டார் ஹோட்டல்களில் நூதன மோசடி! ஒடிசாவில் கைது !!?

by ஆசிரியர்
Reading Mode

30 ஆண்டுகளாக 300 ஸ்டார் ஹோட்டல்களில் நூதன மோசடி: தூத்துக்குடி நபர் ஒடிசாவில் கைது!

நாட்டின் முன்னணி 5 ஸ்டார் ஆடம்பர ஹோட்டல்களை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏமாற்றி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் வின்சென்ட் ஜான் (வயது 69), 1980களில் டெல்லியில் சுற்றுலா வழிகாட்டியாகப் பணியாற்றி வந்த ஹோட்டல்களில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஹோட்டலில் நேரிட்ட அவமானத்திற்கு பழிவாங்கும் நோக்குடன், 1996 முதல் ஸ்டார் ஹோட்டல்களை ஏமாற்றுவதைத் தொழிலாக மாற்றியுள்ளார்.

கண்ணியமான தோற்றம், சரளமான ஆங்கில அறிவு ஆகியவற்றைப் பயன்படுத்தித் தன்னை ஒரு யோகா ஆசிரியர், ஆங்கில ஆசிரியர் அல்லது சுற்றுலா வழிகாட்டியாக ஹோட்டல் ஊழியர்களிடம் அறிமுகம் செய்து நம்பிக்கையைப் பெறுவதில் வல்லவராக இருந்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், கோவா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், தெலுங்கானா, சத்தீஸ்கர் எனப் பல மாநிலங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட சொகுசு ஹோட்டல்களில் இவர் கைவரிசை காட்டியுள்ளார்.

ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்யும்போது இரண்டு பைகளுடன் வரும் இவர், ஒரு பையில் துணிகளையும், மற்றொரு பையில் பழைய செய்தித்தாள்கள் அல்லது தலையணைகளையும் நிரப்பி எடுத்து வருவார். வெளியில் செல்லும்போது ஊழியர்களுக்குச் சந்தேகம் வராமல் இருக்க, செய்தித்தாள்கள் உள்ள பையை அறையிலேயே விட்டுவிட்டு, தனது துணிப்பையுடன் ஹோட்டல் அறையில் இருக்கும் லேப்டாப், விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபானங்கள், சிகரெட்டுகள் போன்ற மதிப்புமிக்க பொருட்களைத் திருடிக் கொண்டு நைசாகத் தப்பி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

கடந்த ஜூன் 25 அன்று சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் 2 நாட்கள் தங்கிய வின்சென்ட் ஜான், ஊழியரை ஏமாற்றி 1.48 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்பைப் பெற்றுக்கொண்டதுடன், 63,755 ரூபாய் பில் தொகையைச் செலுத்தாமல் ஜூன் 27 அன்று தப்பியுள்ளார். ஹோட்டல் நிர்வாகத்தின் புகாரைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் புவனேஸ்வரில் வைத்து இவரைப் போலீசார் கைது செய்தனர். டெல்லி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இவர் மீது ஏமாற்று வழக்குகள் இருப்பதும், பலமுறை போலீசாரின் பிடியில் சிக்கினாலும் தொடர்ந்து இந்த மோசடிகளில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00