பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல் நலக்குறைவால் , மண்ணுலகம் விட்டு, விண்ணுலகம் சென்றார் !!?

by ஆசிரியர்
Reading Mode

பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல் நலம் குறைவால் , மண்ணுலகம் விட்டு, விண்ணுலகம் சென்றார்!? ஒரு நடிகர் மறைந்திருக்கலாம்… ஆனால் அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் என்றும் மறையாது.உங்களுக்கு மிகவும் பிடித்த நானா படேகர் கதாபாத்திரம் எது?

தற்கொலைக்கு முன் என்னை
ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்…!

இது ஒரு சூப்பர் ஸ்டார் உதடுகள்
அடிக்கடி உதிர்க்கும் வார்த்தைகள்!

இவை ஏதோ சினிமா டயலாக் அல்ல!நிறைய விவசாயிகளின் தற்கொலை முடிவை மாற்றி அமைத்த உயிரோட்டமுள்ள வார்த்தைகள்!

அந்த உண்மையான சூப்பர் ஸ்டார் வேறு யாருமல்ல! இந்தி நடிகர் நானா_படேகர் தான்!

ஆனால், உங்கள் பார்வையில் அவர் காலா வில்லன் .

சின்ன வயதில், போஸ்டர் ஒட்டியும், சாலைகளில் ஜீப்ரா கோடு வரைவதும்தான் நானாவின் பிழைப்பு. பின்னர் ,திரை உலகில் கொலோச்சுனாலும் பழசை மறக்கவில்லை நானா !!

ஆறு வருடங்கள் முன்பு, மகாராஷ்ட்ராவில் கடந்த சில ஆண்டுகளாக வரலாறு காணாத வறட்சி.

விவசாயிகள் கொத்து கொத்தாக செத்து மடிவது செத்தனர்.மராத்வாடாப் பகுதியில் நாக்பூர், லாத்தூர், ஹிங்கோலி, பிரபானி, நான்டெட் மாவட்டங்களில் விவசாயிகளின் தற்கொலை அதிகம்.அரசும் , NGO க்களும் செய்வதறியாது ஸ்தம்பித்து நின்றன..

அச்சமயம், வைராக்கியமாக , ஒற்றை மனிதனாக நானா உதிர்த்த வார்த்தைகள் தான் மேற்கூறியது..

சில காலம் சினிமாவை ஒதுக்கி வைத்தார். சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து ‘நாம் ‘ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார்.

முதல் நாளே 80 லட்ச ரூபாய் நன்கொடை குவிந்தது. நானா படேகர் என்ற அந்த பெயருக்கு மக்களிடம் அத்தனை செல்வாக்கு.

2 வது வாரத்தில் 7 கோடியாக உயர்ந்தது. மொத்தம் 22 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்தது.அதில், தான் சம்பாதித்த பணத்தில் 90 சதவீதத்தை அறக்கட்டளைக்கே நானா வழங்கி விட்டார்.
எந்த அமைப்பையும் நம்பாமல், அவரே நேரடியாக களத்தில் குதித்தார்.

மராத்வாடாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை வீடு வீடாக சென்று நேரடியாக சந்தித்து, நிதியுதவி வழங்கினார்.

கணவரை இழந்த மனைவிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இப்போது, மகாராஷ்ட்ராவில் 700க்கும் மேற்பட்ட கிராமங்களில், நானா படேகரின் அறக்கட்டளை, பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டறிந்து உதவி செய்து வருகிறது.விவசாயிகள் தற்கொலை குடுகிடுவென குறைந்திருக்கிறது.

நிதியுதவி போக, எஞ்சிய பணத்தில் மராத்வாடா பகுதியில் உள்ள ஏரிகள், குளங்களை தூர் வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு கோடிக்கு மேல் மரங்கள் நடப்பட்டன. கணவனை இழந்த பெண்களுக்கு சுய வேலை வாய்ப்பு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது.

ஒவ்வொரு கிராமத்துக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவது நானா படேகரின் அடுத்த இலக்கு.

மராத்வாடா மக்களின் இந்த hero மும்பையில் ஒரு பெட்ரூம் கொண்ட பிளாட்டில்தான் இப்போதும் தாயுடன் வசித்து வந்தார்..கேட்டால், அமைதியாக ‘இப்போதுதான் நான் பிறந்ததற்கான அர்த்தத்தை உணர்ந்திருக்கிறேன்” என ‘நச்’ பதில் வருகிறது.

இன்று நம்முடன் அவர் இல்லை ..

அவரின் அந்த மந்திர வாக்கியம் ‘தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்…’! இத்துடன் தன் பயணத்தை முடித்து கொண்டது..

ஆம் அதை சொல்லும் ஆளுமை யாருக்கும் கிடையாது!!

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00