காவல்துறை அதிகாரிகளை பலிகடவாக்கும் திமுக அரசு? பாஜக அண்ணாமலை கடும் கண்டனம்??

by ஆசிரியர்
Reading Mode

தமிழகத்தில் டிஜிபி நியமனத்தில் மாநில அரசு மூப்பு, அனுபவம் ஆகியவற்றை முக்கியமாக கருத வேண்டும். ஆனால் இந்த முறை அந்த நடைமுறை பின்பற்றப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில்,

பஜாக அண்ணாமலை கண்டனம்:

இது குறித்து அறிக்கை வெளியிட்ட பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, ”உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறைக்கு பொறுப்பு டிஜிபியை திமுக அரசு நியமனம் செய்திருக்கிறது.

மாநிலக் காவல்துறை தலைவர் நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் மிகவும் தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. டிஜிபி பொறுப்பில் இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதம் முன்பாகவே, அடுத்த டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறது.

சங்கர் ஜிவால் காவல்துறை தலைவராக நியமிக்கும் போதே அவர் ஓய்வு பெறும் தினமும் தமிழ்நாடு அரசுக்கும் தெரியும். ஆனால், தமிழகத்தில்       அத்தனை உயரதிகாரிகள் பதவியையும், அரசியல்        பதவியாக்கி வைத்திருக்கிறது திமுக அரசு. ஒரு சில காவல் துறை உயர் அதிகாரிகள், திமுக வட்டச் செயலாளர்களை போல பேசுவதையும் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அடுத்த காவல்துறை டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் 6 பேர் இருக்க, பொறுப்பு டிஜிபி நியமனம் மூலம், அவர்கள் பதவி உயர்வை தட்டிப் பறித்திருப்பதோடு, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும் புறக்கணித்திருக்கிறது திமுக.

காவல்துறையை சேர்ந்த அதிகாரிகளை தங்களுடைய அரசியலுக்கு பலிகடாவாக்கும் திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது என்பதையும், நினைவுப்படுத்திக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00