அமைச்சர் விக்னேஷ் அதிரடி – டாஸ்மாக்கில் கூடுதல் ரூபாய் 10 வசூலுக்கு முற்றுப்புள்ளி !!?
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் குவாட்டர் பாட்டிலுக்கு கூடுதலாக ரூபாய் 10 வசூலிக்கப்படுவதாக நீண்ட நாட்களாக அது அருந்துபவர்கள் தரப்பில் புகார்கள் எழுந்து வந்தன.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் பேசுகையில், “டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்கள் நுகர்வோரிடம் சட்ட விரோதமாகக் கூடுதலாக வசூலிக்கும் 10 ரூபாய் கட்டணம் இனி முற்றிலுமாகத் தவிர்க்கப்படும்.
இந்த 10 ரூபாய் தொகையை அரசே அதிகாரப்பூர்வமாக மதுபானங்களின் விலைப்பட்டியலில் (Price List) சேர்க்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்த கூடுதல் தொகை இனி நேரடியாக அரசின் கஜானாவிற்குச் செல்லும்.
மேலும், மதுபானங்களுக்கான பில்களைக் கணினி மயமாக்கும் (Computerized Billing) பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு, அனைத்துக் கடைகளிலும் கணினி ரசீது கட்டாயமாக்கப்படும்.
விதிமீறலில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார்.
.