தமிழக அரசு கேபிள் ஒளி பரப்பிலிருந்து மூன்று தொலைக்காட்சி நிறுவனங்கள் நீக்கம் ! அண்ணாமலை கடும் கண்டனம் !!?

by ஆசிரியர்
Reading Mode

தமிழக அரசு கேபிள் ஒளி பரப்பிலிருந்து மூன்று தொலைக்காட்சிகள் நிறுவனங்கள் நீக்கம் ! அண்ணாமலை கடும் கண்டனம் !!?

தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, பாலிமர் தொலைக்காட்சி, நியூஸ் தமிழ் 24 x 7 மற்றும் ஜனம் தமிழ் தொலைக்காட்சி ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது.
கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?

குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.

ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00