தலைமை காவலரின் தன்னிகரற்ற செயல்! குவியும் பாராட்டுக்கள்!! குழந்தை உயிர் பிழைத்தது!!!

by ஆசிரியர்
Reading Mode

தலைமை காவலரின் தன்னிகரற்ற செயல்! குவியும் பாராட்டுக்கள்!! குழந்தை உயிர் பிழைத்தது!!!

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் பெரியார் நகரில் உள்ள அபிதா குளிர் பான கடையில் தனது 1 1/2 வயது குழந்தையை வைத்துக்கொண்டு பெண்மணி ஒருவர் டீ குடித்துக் கொண்டிருந்தார்…

குழந்தையின் தாய் கதறும் காட்சி

அப்போது அவரது குழந்தை திடீரென சரிந்து கீழே விழுந்த நிலையில், மூச்சில்லாமல் சுயநினைவு இழந்தது…

குழந்தையின் தாய் கத்தி கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்…

அச்சமயத்தில் கடைக்குள் வந்த விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் சரவணன் என்பவர் சிறிதும் யோசிக்காமல் குழந்தையை தூக்கிக்கொண்டு சுமார் 1/2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காமாட்சி தனியார் மருத்துவமனைக்கு ஓடிச் சென்று மருத்துவரிடம் காண்பித்துள்ளார்…

உடனடியாக மருத்துவர்கள் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததின்பேரில் குழந்தை மீண்டும் உயிர் பெற்றது…

இதுகுறித்த சிசிடிவி வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட தலைமை காவலர் சரவணன் செயலை கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்…

தலைமை காவலர் சரவணன் குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடும் காட்சி

ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று குழந்தையின் உயிரை காப்பாற்றிய மதிப்பிற்குரிய தலைமை காவலர் சரவணன் அவர்களை நங்கூரம் மீடியா நெட்வொர்க் நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவிக்கிறது.

வாழ்க காவல்துறை! வளர்க காவலர்களின் சேவை!!

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00