நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக சாலைப் பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியானது உதகை மத்திய பேருந்து நிலையம் தொடங்கி எட்டின்ஸ் சாலை வழியாக ஷேரிங் கிராஸ் சென்று முடிவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் ஆண் காவலர்கள், மற்றும் பெண் காவலர்களும் பெரும்பாலானோர்
கலந்து கொண்டனர்.
மாவட்ட காவல்துறையின் இந்த விழிப்புணர்வு பேரணி பொதுமக்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் நன்மதிப்பை பெற்றுள்ளது.

காவல்துறையின் இந்த விழிப்புணர்வு பேரணியால் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, சாலையில் செல்லும் போது மிகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும், மதுவிலிருந்து முற்றிலும் விடுதலை பெற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். எனவே பொதுமக்கள் இப்பேரணியை பொழுதுபோக்கிற்காக நினைத்து விடாமல் இந்த பேரணியின் உள் அர்த்தம் என்ன என்பதை புரிந்து கொண்டு அனைவரும் மது அருந்தாமல் வாகனத்தை பாதுகாப்புடன் இயக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாக கொண்டு பொதுமக்கள் அனைவரும் நடைமுறைப்படுத்த வேண்டும்.