புத்தாண்டை கொண்டாட , புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையின் வழிகாட்டல்கள்???

by ஆசிரியர்
Reading Mode

புத்தாண்டை கொண்டாட , புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையின் வழிகாட்டல்கள்???

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2026 புத்தாண்டு தினத்தன்று பொது மக்களின் பாதுகாப்பு பொது அமைதி மற்றும் சட்ட ஒழுங்கு நிலைநாட்டும் பொருட்டு மாவட்ட காவல்துறையின் சார்பாக பொது மக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்!
புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை.

வருகின்ற 31.12.2025 அன்று இரவு புத்தாண்டு தின கொண்டாட்டம் என்ற பெயரில் அனுமதியின்றி யாராவது DJ பார்ட்டிகளை ஏற்பாடு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.

பொதுச் சாலைகள், சந்திப்புகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் கூட்டமாக கூடுதல் அல்லது கொண்டாட்டம் நடத்தக்கூடாது.

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி. பட்டாசு வெடித்தல் போன்ற செயல்கள் செய்யக்கூடாது.

புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து “பைக் ரேஸ்” செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்களை கைது செய்து, பைக்குகளையும் பறிமுதல் செய்யப்படும். மேலும் அவர்களது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும். அதே போன்று சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் “வீலிங்” செய்வதும், அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் வாகனம் ஓட்டுவது. பொது இடங்களில் மது,அருந்திவிட்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

புத்தாண்டு கொண்டாடுவதற்கு கட்டுமாவடி முதல் அரசங்கரை வரை உள்ள கடலோர பகுதிகளில் கடலில் இறங்கி குளிக்கவும், கடலுக்குள் படகில் அழைத்து செல்லவும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ரோந்து மேற்கொண்டும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

2026 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா இ.கா.ப உத்தரவின்படி 1500 காவல்துறையினர் பாதுகாப்புக்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் முக்கியமாக பொதுமக்கள் வழிபடும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட உத்தரவுகளை மீறும் நபர்கள் மீது சம்மந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் புத்தாண்டை கொண்டாட காவல்துறை கேட்டுக்கொள்கிறது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00