காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து!!?
சட்டத்திற்கு முன் 24 மணி நேரம் கூட தாங்கிப்பிடிக்க முடியாத ஒரு மாவட்ட நீதிபதியின் ஆணை.
தனது தனிப்பட்ட விரோதம் காரணமாக சட்டத்தை வளைத்து பொய்யான புகாருக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என ஒரு பொய்யான ஆணையை பிறப்பித்து தனிப்பட்ட ஆதாயம் அடைந்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியின் அதிகார திமிரையும் துஷ்பிரயோகத்தையும் உயர் நீதிமன்றம் நாடி சட்டப் போராட்டம் மூலம் உடைத்தெறிந்த அதிகாரிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
சட்டத்தின் முன் நீதிபதியும் சிறியவரே! சட்டம் தான் பெரியது.
ஆணையிடுபவர் கடவுள் அல்ல சட்டம் தான் கடவுள் என்பதை இது எடுத்துரைக்கிறது.
மேலும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி மீது துரை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்ற செய்தி சட்டத்தை தனிப்பட்ட ஆதாயத்திற்காக வளைப்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கட்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த அற்புதமான தீர்ப்பை, நங்கூரம் மீடியா நெட்வொர்க் மற்றும் போலீஸ் விஷன் மீடியா சார்பாக வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.