காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது நியாயமானதா!????

by ஆசிரியர்
Reading Mode

வன்கொடுமை சட்டம் ! நாட்டில் திருத்தப்பட வேண்டிய சட்டம், காஞ்சி டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது நியாயமானதா ?-மாவட்ட நீதிபதிகள் அதை விசாரிப்பதில்லையா ?

வன்கொடுமை சட்டத்தை நீதிமன்றம் அந்த சட்டத்தை எப்படி பாதுகாக்கிறது? சட்டம் மக்களை பாதுகாக்க தானே தவிர, நிரபராதிகள் மீது அந்த சட்டத்தை பயன்படுத்துவதை நீதிமன்றம் ஆதரிக்கிறதா?

எப்படி ஒரு டி.எஸ்.பி யை வன்கொடுமை சட்டத்தில் ஒருவர் புகார் கொடுத்தால் , அந்த புகாரின் மீது அவரை உடனே கைது செய்து விட வேண்டுமா? இங்கு பிரச்சனை என்னவென்றால்!

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், பூசிவாக்கத்தில் பேக்கரி நடத்தி வருபவா் சிவா. இவரது கடைக்கு அதே பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவா் பொருள்கள் வாங்க வந்துள்ளார். இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு , அது முற்றிய நிலையில், கடையில் இருந்த சிவாவின் மருமகன் லோகேஷ் மற்றும் ஊழியா்கள் முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது. வாய் தகராறு ?கைகலப்பு நடந்ததா ?இல்லையா? என்று கூட தெரியாது.

இது ஒன்றும் பெரிய பிரச்சனையோ, அல்லது, இதனால் பெரிய இழப்போ, யாருக்கும் ஏற்படவில்லை . அப்படி இருக்கும்போது , ஒரு டி எஸ் பி கைது செய்யப்பட வேண்டிய அவசியமென்ன?மேலும்,கொலை குற்றவாளிகளுக்கு கூட அப்படிப்பட்ட தண்டனை இல்லையே ,கொலை குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் தான், அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் . ஆனால், இப்படி எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், அவர்கள் வன்கொடுமை சட்டத்தை கையில் எடுக்கிறார்கள். அதற்கு உதாரணம் பல !

டாக்டர் அம்பேத்கார் வன்கொடுமை சட்டத்தை எதற்காக கொண்டு வந்தார் ?அதன் நோக்கம் என்ன? பட்டியல் இன மக்கள் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த கொண்டு வந்தாரா? இது நீதிமன்றத்திற்கு தெரியுமா? தெரியாதா?

இப்படி பட்டியல் இன சமூகத்தில் ஒருவரின் சாதியை சொல்லாமல் இருந்தாலும், அவர் சொன்னதாக புகார் அளித்தால், அவர் மீது நடவடிக்கை எடுத்து விட வேண்டும்‌. என்ன சட்டம்?

ஒன்று நீதிமன்றத்தில் ,நிரூபிக்க வேண்டும். இல்லை சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும். அதுவும் அவர்களுக்கு வேண்டிய ஆட்களும், அந்த சமூகத்தினரும் ,அதை நிரூபிக்க கூடாது .மற்ற சமுதாயத்தில் உள்ளவர்கள் அதை நிரூபிக்க வேண்டும். இதுதான் உண்மையான சட்ட வழிமுறை!

ஆனால், எதுவுமே இல்லாமல், ஒரு டி எஸ் பி தண்டிக்கப்படுகிறார் என்றால் அது ஏற்றுக்கொள்ள முடியாது. காவல்துறையில் அவர்கள் சட்டத்தை பாதுகாக்க இருக்கிறார்களா? இல்லை, பொய் புகார்கள் கொடுத்தால், அவர்களை கைது செய்ய இருக்கிறார்களா? எதற்கு இருக்கிறார்கள்? என்பதை இவரை கைது செய்த நீதிபதிகள் ,இந்த சட்டத்தின் உண்மையை தமிழக மக்களுக்கும் , பத்திரிகைகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.மேலும்,

எதன் அடிப்படையில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டார்? இது தவிர, எத்தனையோ சட்டங்கள் நாட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், வன்கொடுமை சட்டம் மட்டும்தான் இன்று நிரபராதிகளை பழிவாங்கும் ஆயுதமாக அதை அரசியல்வாதிகள் , பட்டியல் இன மக்கள், இதை தவறாக சமுகத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலும், குறிப்பாக கிரிமினல்கள் இந்த சட்டத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். ஒருவரை பழிவாங்கும் ஆயுதமாக வன்கொடுமை சட்டம் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்தேன். ஒரு கல்லூரியில் பணியாற்றக்கூடிய ஆசிரியர் ,அந்த நிர்வாகம் அவரை ,பழிவாங்கி விட்டதாக ,அந்த ஆசிரியர் கல்லூரி நிர்வாகி மீது வன்கொடுமை சட்டத்தில் புகார் அளித்துள்ளார்.உடனே அவரை கைது செய்யுங்கள். என்னடா இது? ஒன்றுமே புரியவில்லை.

நாட்டில் எவ்வளவோ அநியாயங்கள், அக்கிரமங்கள் நடந்து கொண்டிருக்கிறது .அதை எல்லாம் கேட்பதற்கு ஆட்களே இல்லை. ஆனால் ஒருவர் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய சங்கர் கணேஷ் டி எஸ் பி ஐ நீதிபதி உத்தரவிடுகிறார் என்றால், இந்த நாட்டில் போலி சட்டங்கள் இந்த சமுதாயத்தை ஏமாற்றிக் கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது.

இப்படி பல போலி சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். ஓட்டுக்காக அரசியல் கட்சிகள், இந்த சட்டங்களை ஆதரிக்கிறார்கள். எதுவும் நியாயத்தின் அடிப்படையில் ,நீதியின் அடிப்படையில், நீதித்துறை எதற்கு இருக்கிறது? அதை ஆய்வு செய்து, உண்மை என்ன என்று நிரூபிக்கப்பட்டால்! தானே ஒருவர் தண்டிக்கப்பட வேண்டும் .

நீ குற்றவாளி என்றால் ,அவர் குற்றவாளி .அதற்கு எதற்கு நீதிமன்றம் ?அதற்கு எதற்கு சட்டம்? அப்படி என்றால் ஜாதிக்கு ஒரு சட்டம் !ஜாதிக்கொரு நீதியா? இதையெல்லாம் மறு சீரமைப்பு செய்ய வேண்டிய சட்டம்.

சமூகம் எவ்வளவோ மாற்றங்களை கொண்டிருக்கிறது. இங்கே, இந்த சட்டம் மட்டும் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இருக்க வேண்டிய அவசியம் என்ன? வன்கொடுமை சட்டம் மற்ற சமூகத்தை உடனடியாக பழி வாங்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்துகிறது இந்த சட்டம் .

ஒரு டிஎஸ்பிக்கே இந்த நிலைமை என்றால்! சாதாரண பாமர மக்களின் நிலை என்ன ?அதனால், இதை மறு சீரமைப்பு மத்திய அரசு செய்ய வேண்டும். நீதிமன்றமும் ,சட்ட நிபுணர்களும் இதுகுறித்து ஆய்வு செய்து இதற்கான ஒரு முக்கிய தீர்வு காண வேண்டும் என்று நங்கூரம் மீடியா நெட்வொர்க் மற்றும் போலீஸ் விஷன் மீடியா பத்திரிகையின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இக் கோரிக்கை .

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00