டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பிரிவு உபச்சார விழா!! என்னுடன் துணை நின்றவர்களே உண்மையான ஹீரோக்கள்! டிஜிபி சங்கர் ஜிவால் நெகழ்ச்சி பேச்சு!!

by ஆசிரியர்
Reading Mode

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால், காவல் துறை வீட்டு வசதி கழக டிஜிபி ஷைலேஷ்குமார் யாதவ் ஆகிய இருவரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி பணி ஓய்வு பெறுகின்றனர். இதையொட்டி, இருவருக்கும் பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் பிரிவு உபச்சார விழா ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற்றது. இதில்,இருவருக்கும் காவல்துறை சார்பில் பிரியாவிடை அணிவகுப்பு    மரியாதை செலுத்தப்பட்டது. ஓய்வு பெறும்  வயதை மாற்ற வேண்டும்.

நிகழ்ச்சியில் பெருநகர சென்னை காவல்   ஆணையர்    அருண் பேசுகையில், “இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஓய்வு பெறுகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் ஓய்வு வயது கிடையாது. காவல்துறை அதிகாரிகள் தகுதியாக இருந்தால், தொடர்ந்து பணியாற்றலாம். அதே போல், நமது காவல்துறை    அதிகாரிகள் ஆரோக்கியமாக இருக்கும் போதும், 60 வயதில் ஓய்வு பெறுவது சிறப்பாக இல்லை. எனவே, காவல்துறை அதிகாரிகள் ஓய்வு பெறும் வயதை மாற்ற வேண்டும்.

டிஜிபி ஷைலேஷ்குமார் யாதவுக்கு நினைவுப் பரிசை வழங்கிய டிஜிபி பிரமோத்குமார் தற்போது டிஜிபி பணியில் இருந்து ஓய்வு பெறும் சங்கர் ஜிவாலுக்கு, தீயணைப்பு ஆணையத் தலைவர் பதவி கிடைத்துள்ளது. அதேபோல், சைலேஷ் குமார் யாதவ் ஒரு மாநிலத்திற்கு ஆளுநராகும் வரை நிறுத்தமாட்டார். இவர், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி. காவல் துறை அதிகாரியாக பாளையங்கோட்டையில் இருந்தார். துணை      ஆணையராக திருநெல்வேலியில் பணிபுரிந்தார். மாஞ்சோலை சம்பவம், தாமிரபரணி சம்பவம் நடந்த போது வன்முறையை கட்டுப்படுத்தியவர் இவர். மத்திய அரசின் பணிகளில் இருந்து, பின்னர் திருச்சி, மதுரை காவல்துறை ஆணையராக பணியாற்றினார்.

டிஜிபி சங்கர் ஜிவால்

டிஜிபி சங்கர் ஜிவால் 1990 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து வந்த பொறியியல் பட்டதாரியான    இவர்,    சேலத்தில் ஏஎஸ்பியாக பணியை தொடங்கினார். தொடர்ந்து, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு டிஐஜி-யாக பணியாற்றினார். நீண்டகாலம் மத்திய பணியில் இருந்து மாநில பணிக்கு வந்தவர்.

உளவுத்துறை ஐஜியாக பணிபுரிந்தார். பிறகு, சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்று     சிறப்பாக பணியாற்றினார். பொதுமக்கள் மற்றும் காவல் துறையின் நண்பனாக பணியாற்றி தமிழக டிஜிபியாக பதவி உயர்வு பெற்றவர்” எனக் கூறினார்.உண்மையான கதாநாயகர்கள் இவர்கள் தான்

நிகழ்ச்சியில் டிஜிபி சங்கர் ஜிவால் பேசுகையில், “இத்தனை ஆண்டுகளாக என்னுடன் துணை நின்ற எனது பாதுகாப்பு அதிகாரிகள் தான் உண்மையான கதாநாயகர்கள். இரவு – பகலும் என்னுடன் பயணித்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உண்மையாகவும், நேர்மையாகவும் உழைத்தால் உங்கள் வாழ்விற்கு உயர்வை கொடுக்கும்” எனக் கூறினார்.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00