காவலர்கள் விசாரணை செய்வதே மனித உரிமை மீறலா?? நீதிமன்றத்தின் சரியான தீர்ப்பு??

by ஆசிரியர்
Reading Mode

காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணைக்கு அழைப்பதே மனித உரிமை மீறலா?’’ அதிரடி காட்டிய சென்னை நீதிமன்றம்!

விசாரணைக்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது.

சொத்து விவகாரத்தில் விசாரணைக்கு அழைத்து காவல் ஆய்வாளர் மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.

மனித உரிமை மீறல் வழக்கில் புளியந்தோப்பு காவல் ஆய்வாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவும் ரத்து.காவல் ஆய்வாளருக்கு ரூ.10,000 அபராதம் விதித்த உத்தரவையும் ரத்து செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

மனித உரிமை மீறல் வழக்கில் ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மனித   உரிமை    ஆணையம் உத்தரவிட்டிருந்தது. மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆய்வாளர் ரவி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் மேற்படி உத்தரவை நீதிமன்றம் வழங்கி உள்ளது.

குற்றவாளிகள் செய்யும் குற்றங்களை தீவிர விசாரணை செய்து அதற்கான தண்டனைகளை பெற்றுத் தருவதற்கு தான் காவல் நிலையமும், காவலர்களும் இருக்கிறார்கள் அதற்கான  உரிமை   காவல் துறையினருக்கு இருக்கிறது.ஆனால் குற்றம் செய்பவரை விசாரிக்கக் கூடாது, லத்தி சார்ஜ் செய்யக்கூடாது, இரவில் விசாரணை செய்யக்கூடாது என்று   பல   சட்டங்களை காவல் துறைக்கு விதித்த காரணத்தால் தான் தமிழ்நாட்டில் எண்ணிலடங்கா குழந்தை   கற்பழிப்புகளும், கொலைகளும், கொள்ளைகளும் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகின்றன.

இதை தடுக்க வேண்டும் என்றால் காவல்துறையினருக்கான முழு அங்கீகாரத்தை வழங்கினால் மட்டுமே குற்றச் சம்பவங்கள் நடைபெறாத தமிழகத்தை உருவாக்க முடியும். காவல்துறையினருக்கு குற்றவாளிகளை விசாரணை செய்வதற்கும், அவர்கள் செய்த குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தகுந்த தண்டனைகளை பெற்றுத் தருவதற்கும் காவல்துறைக்கு முழு உரிமையை  கொடுக்க   வேண்டும்   என்பதே எங்களின்   கோரிக்கையாகும்.

காவல் நிலையத்தில் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்களை பெற்று எதிர்த்தரப்பினரிடம் விசாரிப்பதே மனித உரிமை மீறல் என்றால்?? காவலர்கள் அவர்களின் பணியை எப்படித்தான் செய்ய முடியும். இப்பொழுதாவது நீதிமன்றத்தில் இருந்து காவல்துறைக்கு உண்மையான நீதியை நீதிமன்றம் வழங்கி உள்ளது, பாராட்டுக்குரியது.

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00