திருப்பூர் மாவட்டம்,எல்.ஆர்.ஜி.அரசு கலைக்கல்லூரியில் திருப்பூர் மாநகர போக்குவரத்து காவல் ஆணையர் A.ராஜசேகர் தலைமையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு மற்றும் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் திருப்பூர் மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் A.ராஜசேகர் தலைமையில் கே.ஆர்.எஸ். கல்வி நிறுவனத்தை சேர்ந்த தாளாளர், முனைவர் ஜோய்சேகர், இயற்கை மருத்துவர் யசோதா, எல்.ஆர்.ஜி. அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் நளினி மற்றும் எல்.ஆர்.ஜி. அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த 1600 மாணவிகள் மற்றும் அனைத்து பேராசிரியர்கள் மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். போதைப் பழக்க தடுப்பு மற்றும் அதனால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போதை பொருளுக்கு எதிரான கையொப்பமிடுதலும் மற்றும்
போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.

போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளவர்களை மீட்டெடுத்து நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.
போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு,பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன்.மாநிலத்தின் வளர்ச்சிக்கும்,மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்கேற்பேன் என்றும் உளமார உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மேலும் போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் A.ராஜசேகர் மாணவிகளுக்கு கீழ்க்கண்ட உறுதிமொழிகளை எடுத்துக்கூற 1600 மாணவிகளும் உற்சாகத்துடன் திரும்பக்கூறி கீழ்கண்ட உறுதிமொழியை ஏற்றனர்.
தடுப்போம்! தடுப்போம் !! போதைப் பொருட்களை தடுப்போம் !!! ஒழிப்போம் ! ஒழிப்போம் !! போதைப் பொருளை ஒழிப்போம்!!!
போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி கையெழுத்து!
இன்று முதல் தமிழ்நாட்டில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆதரிப்பேன் என்றும், போதைப் பொருட்களை ஒழிக்க அரசுக்கு துணையாக இருப்பேன் என்றும், இங்கு கையெழுத்து இடுகிறேன் என்ற உறுதிமொழியை ஏற்று அனைத்து கல்லூரி மாணவிகளும், பேராசிரியர்களும் கையொப்பமிட்டனர்!.
போக்குவரத்து உதவி ஆணையர் A.ராஜசேகர் திருப்பூர் மாவட்டத்தில் பொறுப்பேற்றதிலிருந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு போதைப் பொருளால் ஏற்படும் தீங்கு மற்றும் வாகனங்களை ஓட்டும்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறை பற்றியும் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி நல் மதிப்பை பொதுமக்களிடம் பெற்றுள்ளார்கள். ஈரோடு,கோவை மற்றும் பிற மாவட்டங்களில் A.ராஜசேகர் பணியில் இருந்த போது அங்கும் மிகச் சிறப்பான முறையில் தன் பணியை திறம்பட செவ்வனே செய்து,சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் நன்மதிப்பையும்,பாராட்டையும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.உதவி ஆணையர் திரு A.ராஜசேகர் அவர்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.