நாகை மாவட்டம்,வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா (29.08.2025) ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கி (08.09.2025) ஆம் தேதி மாலை கொடி இறக்கத்துடன் திருவிழா முடிவடைய உள்ளது.இவ்விழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் காவல் சரக டிஐஜி ஜியாவுல்ஹக், இ.கா.ப, வேளாங்கன்னி பகுதிக்கு வருகை புரிந்து திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கண்காணிப்பு கேமராக்களை (CCTV Camera) நிறுவி, அதன் முக்கியத்துவம் குறித்தும்,திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தனிப்படை அமைத்து ஆய்வு கூட்டம் நடத்தி, ஆலோசனைகள் வழங்கினார்.

மேலும் கடற்கரையில் குளிக்க அனுமதி இல்லை எனவும், போக்குவரத்தை ஒழுங்கு படுத்தி பொதுமக்கள் மற்றும் திருப்பணிகள் எவ்வித இடையூறும் இன்றி செல்ல ஏதுவாக சிறப்பான, சீரான விரைவான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் மற்றும் பல்வேறு ஆலோசனை வழங்கினார்.நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.செல்வக்குமார் இ.கா.ப அவர்கள் உடன் இருந்தார்.

நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா பேராலயம், உலகப் புகழ் பெற்ற பேராலயமாக திகழ்ந்து வருகிறது. இந்த ஆலயத்தின் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அன்னையின் தரிசனம் காண தமிழ்நாட்டில் இருந்தும், மற்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வர இருப்பதால், எந்தவிதமான குற்றச்சம்பவங்களும் அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருப்பதற்காக தமிழக காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலவிதமான பாதுகாப்பு நடவடிக்கையில் தற்பொழுதே ஆரம்பித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது வரவேற்கத்தக்கதாகும்.