சட்டமன்றத்தில் செயலாளரின் உறங்கும் நிலை! மாறுமா இந்த அவல நிலை!! சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரா – அப்பாவுவா??
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இரு தொகுதிகளில் வெற்றி பெற்றவர் ஏதாவது, ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். இதன்படி திருச்சி கிழக்கு தொகுதியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அரசிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் மூலம் காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதியில் இன்னும் ஆறு மாதத்திற்குள் மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்.ஆகவே இந்தத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கும், என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட அரசிதழில் சபாநாயகர் பெயர் அப்பாவு என பதிவாகி உள்ளது. இவர் ஏற்கனவே இருந்த திமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் தற்போது ஜே.சி.டி.பிரபாகர் சபாநாயகராக இருந்து வருகிறார்.
தற்போதைய சபாநாயகர் யார் என்று கூட தெரியாமல் சட்டசபைச் செயலாளர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கவனக்குறைவாக இருந்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம், சட்டமன்றத்தின் நிர்வாகப் பணிகளை கவனிக்கும் உச்சகட்ட அமைப்பாகும்.
தற்போது சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களுக்குள் தான் பதவி ஏற்றுள்ளார். இது கூடத் தெரியாத சட்டப்பேரவை செயலாளர் மற்றும் அதிகாரிகள் தவறு இழைத்துள்ளனர்.
இதைவிட அவர்களுக்கு முக்கியமான வேலை என்ன இருக்கிறது. குளத்தை வெட்டி தூர்வாரும் வேலை இருக்கிறதா? மருத்துவமனைகளை கண்காணிக்கும் வேலை இருக்கிறதா??.
சட்டமன்ற நடவடிக்கைகளை கூட கண்காணிக்க தெரியாமல் சபாநாயகர் பெயரை மாற்றி அதுவும் அரசிதழில் வெளியிடுவது மிகப் பெரிய தவறு!
எவ்வளவு கவனக்குறைவாக சட்டமன்றத்தில் செயல்பட்டு இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே முக்கியச் சான்றாக உள்ளது.
இது கவனக்குறைவாக ஏற்பட்டதா அல்லது முதல்வர் விசில் புரட்சி விஜய்க்கு எதிராக கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கத்தில் செயல்பட்டனரா!? என்று தெரியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்!?
ஆகவே இந்த தவறைச் செய்த சட்டசபை செயலாளர் மற்றும் அதிகாரிகள் மீது துறை ரீதியான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.