பச்சிளம் குழந்தையை பெற்ற தாயே வீசி சென்ற அவலம் !தாய் காவல்துறையிடம் ஒப்படைப்பு!? போலீசார் விசாரணை!!

by ஆசிரியர்
Reading Mode

பச்சிளம் குழந்தையை தாயே வீசி சென்ற அவலம் – தாய் காவல்துறையிடம் ஒப்படைப்பு!? போலீசார் விசாரணை!!

ஆம்பூர் அருகே பிறந்த சில தினங்களேயான பச்சிளம் குழந்தையை டாஸ்மாக் கடை அருகில் வீசி விட்டுச் சென்ற தாயை பொதுமக்கள் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வடகரை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை அருகே இன்று ஆட்டோ ஒன்றில் கை குழந்தையுடன் வந்து இறங்கிய இளம் பெண் தன்னுடைய கை குழந்தையை சாலை ஓரத்தில் விட்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பி செல்ல முயன்றுள்ளார்.

இதனைப் பார்த்த பொதுமக்கள் சம்மந்தப்பட்ட பெண்ணையும், ஆட்டோ ஓட்டுனரையும் மடக்கி பிடித்து குழந்தையை மீட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உம்ராபாத் காவல் துறையினர் குழந்தையை மீட்டு சம்மந்தப்பட்ட பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையின் விசாரணையில் வீராங்குப்பம் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரி என்பதும், இவருக்கு ஏற்கனவே மணிகண்டன் என்பவரோடு திருமணமாகி குடும்பப் பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கோபி என்பவருடன் தவறான பழக்கம் காரணமாக பிறந்த குழந்தை என்பதால் குழந்தையை கைவிட முயற்சி செய்து சிக்கியுள்ளார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிறந்து சில தினங்களான குழந்தையை பெற்ற தாயே வீசி விட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நம் பாரத நாட்டின் கலாச்சாரமும், பண்பாடும் சீரழிந்து அழிக்கப்பட்டு வருவதால்தான் இது போன்ற தகாத பழக்க வழக்கங்களால் தான் பெற்ற பிள்ளையை தாயே ரோட்டில் வீசி எரியும் நிலை வந்துள்ளது.

எனவே நம் பாரத நாட்டின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் ஒவ்வொரு குடிமகனும் பயன்படுத்தி உயர் குணங்கள் பெற்று நல்வாழ்க்கை வாழ்வோமாக!!

Customize Text: Font Color:

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00