திருவள்ளுவர்.. ஹிந்து சித்தர்.
சிலர் இவர் சமணரா, பௌத்தரா என்றும் வாதாடிப் பார்த்து தோற்றுப் போனார்கள். ஏனெனில் சமணமோ பௌத்தமோ, தெய்வத்தைப் பற்றிப் பேசுவதில்லை; வள்ளுவனோ தெய்வம் பற்றியும், வானுறையும் தெய்வம் பற்றியும் அடிக்கடி பேசுகிறான் (திருக்குறள் 619, 50, 702, 43, 55, 1023.
கடவுள் வாழ்த்தில் இவர், கடவுளுக்குப் பயன்படுத்திய சொற்கள் எல்லாம் தேவாரம், திவ்வியப்பிரபந்தத்தில் வருகின்றன. சம்ஸ்கிருதத்திலும் உள்ளன.
திருவள்ளுவர் குறிப்பிடும் தெய்வங்கள்:–
அடி அளந்தான் – திருமாலின் (த்ரி விக்ரம) வாமனாவதாரம் (610)
அமிழ்து- பாற்கடலை கடைந்தபோது வந்த அம்ருதம் 64, 1106, 720, 82 (சாவா மருந்து)
ஆதி பகவன் – 1
யமன் (கூற்றம்) – 269, 1085, 326, 765, 1083
பித்ருக்கள் (இறந்தோர்)- தென்புலத்தார் 43 யமன் வாழும் திசை
பிரம்மா – உலகு இயற்றியான் 1062
இந்திரன் – 25
கண்ணன் – தாமரைக்கண்ணான் 1103
லக்ஷ்மி- தாமரை யினாள் 617, 179, 519, 920,
மூதேவி – மாமுகடி 617, 936
பன் மாயக் கள்வன் (கோபி, கிருஷ்ணன்?)-1258
வள்ளுவன், பல நூறு குறள்களில் சொன்ன— தவம், தானம், வேள்வி, தர்மம் (அறம்), நோன்பு, பார்ப்பான்,அந்தணன், புத்தேளிர் (தேவர்), மேல் உலகம், பிறவாமை, மறை, மறை மொழி (மந்திரம்), விதி, நிலையாமை, மெய்ப்பொருள், மாசறு காட்சி, நூல் (வேதம்) முதலிய இந்துமத விஷயங்களைப் பட்டிமன்றத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை.
லெட்சுமியும் விஷ்ணுவும், லெட்சுமியின் அக்காளும், பத்து அவதாரங்களில் ஒன்றும், அமிழ்தமும் வைஷ்ணவ விஷயங்களாதலால் திருவள்ளுவர் ஹிந்து என்று முடிவு செய்யலாம்.
இதற்கு அடுத்தபடியாக வருவது வேத கால தெய்வங்களான இந்திரன், யமன் ஆகும்.
பிரம்மாவைக் கூட — (உலகு இயற்றியான் 1062) — குறிப்பிட்ட வள்ளுவன் சிவனை நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால் கடவுள் வாழ்த்தில் வரும் பத்து விஷயங்கள் சிவனுக்கும் திருமாலுக்கும் பொதுவான விஷயங்களே. அதே போல பாற்கடலைக் கடைந்து அமிழ்தம் எடுத்ததும் சிவ- விஷ்ணுவுக்குப் பொதுவான விஷயங்களே.
சிவனைப் பற்றியும் பிரம்மாவைப் பற்றியும் மறைமுகக் குறிப்புகள், இரண்டு குறள்களில் வருகின்றன:
பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் (580)
அப்புறம் பொங்கல் பண்டிகைல மதம் இல்லனு சொல்றயே…
சூரியனை ஹிந்துக்களை தவிர வேறு யாரு கும்பிடுவா முட்டா பயலே?