துரோகிகள் இப்போது எங்கே!!!??
அன்பு, பாசம், நேசம் என்று என் வாழ்க்கைகுள் வந்தார்கள்…
நெருக்கமானார்கள், நம்பிக்கையை கொடுத்தார்கள், விசுவாசத்தை காண்பித்தார்கள், வாக்குறுதிகளை வழங்கினார்கள், திருமாங்கல்யம் பெற்றுக் கொண்டார்கள்…
ஒரு கோப்பையில் அருந்தினார்கள், நன்றி உணர்வோடு இருந்தார்கள், நல்லது கெட்டதில் கலந்து கொண்டார்கள், அன்னியோன்யமானார்கள்…
கொஞ்ச நாள் நகர்ந்தது……
தேவைகளை நிறைவேற்றினார்கள், ஆசைகளை அனுபவித்தார்கள், கொடுத்த சத்தியங்களை மீறினார்கள், பழியை சுமத்தினார்கள்…
பொய்களை பரப்பினார்கள், இடைவெளியை உருவாக்கினார்கள், வன்மத்தை கக்கினார்கள், விடைபெற்று கிளம்பி சென்று விட்டார்கள்…
இந்த துரோகிகள் எல்லாம் இப்போது எங்கே????
அன்பு பாசம் நேசம் என்று…..
இன்னொருவருடைய வாழ்க்கைக்குள் இந்நேரம் போய் இருப்பார்கள். வாழ்த்துக்கள்….
வலிகள் / வரிகள்
நங்கூரம் நாகராஜ்