இராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் தடை உத்தரவு ! மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆணை !!!

by ஆசிரியர்
Reading Mode

இராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி முதல் இரண்டு மாத காலத்திற்கு தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11- ந் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்க த்தேவர் குருபூஜை விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு வருகிற 9ஆம் தேதி முதல் 2 மாத காலத்திற்கு 163-(1) ன் படி) தடை உத்தரவு பிறப்பித்து இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.

இது தவிர வருகிற 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை  வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாடகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள், டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்களில் நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்துஐவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

அதே போல நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் 1- கிலோ மீட்டருக்குள் மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்று ஜோதி எடுத்து வரவேண்டும்

மேலும் அஞ்சலி செலுத்த வரும் வாகனங்கள் மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்றுத்தான் வர வேண்டும் இந்த தகவலை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் !!

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00