இரவு நேர சிந்தனை..
கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள்
மயிலைப் போல காகம் அழகு இல்லை. ஆனால் படையல் என்னவோ காகத்திற்குத் தான் வைக்கிறார்கள். எனவே நீ நீயாகவே இரு யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே.
நிராகரிப்புகளைக் கண்டு நெஞ்சு உடையாதே உன்னை யாராவது தூக்கி எறிகிறார்கள் என்றால்,
இறைவன் உன்னை மேலே தூக்கி விடுகிறான் என்று அர்த்தம்.
எது வந்தாலும் எதிர்த்து நின்று போராடு அனைத்தும் நன்மைக்கே என்பதை தீர்க்கமாக நம்பு.
நீ நிச்சயம் முன்னேறுவாய் உன் மனதில் எதிர்காலத்தைப் பற்றிய பயம் இருந்தால் அதைத் தூக்கி எறிந்து விடு.
அதாவது தூங்காத இரவுகள் இருக்கலாம் ஆனால் விடியாத இரவு இல்லை முடியாத செயலுமில்லை. ஆகையால் முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம்.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.
கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள்.
“விடியும் நாளைய பொழுதும் நமக்கு நன்மை பயக்கும்.”
இனிய இரவு வணக்கம்!!