கழுத்தில் நீ போட்ட மாலை பூக்களால் அல்ல!! பொய்களால் ஆனது!!!

by ஆசிரியர்
Reading Mode

காலியான அலமாரி
கல்யாண போட்டோவில்
கச்சிதமாய்ப் பொருந்தி நின்றோம்…
வாழ்க்கை போட்டோவில் மட்டும்
என்னை மட்டும் crop செய்துவிட்டாய்.
கழுத்தில் நீ போட்ட மாலை
பூக்களால் இல்லை,
பொய்களால் ஆனது என்பது
எனக்குப் பின்னர்தான் புரிந்தது.

புது வீடு என்பதால்
உன் மௌனம் என்றிருந்தேன்…
அது வேறொருவருக்கான
waiting call எனத் தெரியாமலே போனேன்.
தோழிகளுடன் அரட்டை என
சிரிப்பை ரசித்திருந்தேன்…
உன் சிரிப்பின் ரிங்டோன்
வேறு யாருக்கோ ஒலித்திருக்கிறது.


உனக்காக உன் வீட்டாரிடம்
வாதாடிய ஒவ்வொரு நொடியும்…
நீ அவர்களோடு சேர்ந்து
எனக்கெதிராய் ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறாய்.
உன்னை protect செய்ய நினைத்தது
என் முட்டாள்தனம்…
நீயோ அவர்களுடன் ஏற்கெனவே
ஒரு team-ஆக இருந்திருக்கிறாய்.

நீ போனதும்
பாதி நிறைந்த உன் அலமாரியைப் பார்த்து,
உன் கோபமும் பாதியில் தீர்ந்துவிடும்
எனக் காத்திருந்தேன்.
திரும்பி வருவாய் எனத் திறந்தே வைத்திருந்தேன்
என் வீட்டுக் கதவை…
தபால்காரன் மட்டும் தந்து சென்றான்
உன் divorce நோட்டீஸை.

இப்போது
என் பெயருக்கும் உன் பெயருக்கும் நடுவில்
காதல் இல்லை…
வக்கீல் அனுப்பிய வார்த்தைகளின்
காகித வாசம் மட்டும்.

எல்லா உண்மைகளும்
கொஞ்சம் லேட்டாகத்தான் தெரியவருகிறது.
வேறொருவரின் story-ல் guest role செய்ய,
என் life-ஐ audition எடுத்திருக்கிறாய்.
Society-யின் கௌரவத்தைக் காப்பாற்ற
ஒரு software போல
என் வாழ்க்கையை install செய்து
uninstall செய்துவிட்டார்கள்.

இன்று உன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில்
நீ தேவதை, அவன் ராஜகுமாரன்.
உங்கள் நண்பர்களின் inbox-ல்
நானோ ஒரு வேண்டாத bad comment.



டிகிரி வாங்கியும் முட்டாள் ஆனேன்…
உன் பொய்யை உண்மை என நம்பிய
ஒரே காரணத்தால்.
Download செய்யும் முன் யோசித்திருக்க வேண்டும்…
அன்பையும், நம்பிக்கையையும்.

நீ உன் வாழ்க்கையின்
அடுத்த level-க்குச் சென்றுவிட்டாய்.
நானோ இன்னும் முதல் level-லிலேயே
hang ஆன system போல நின்றுவிட்டேன்.
சிரிக்கவும் முடியவில்லை…
அழவும் முடியவில்லை…
மூச்சு மட்டும் விடுகிறேன்,
உயிருடன் இருப்பதற்கான
ஒரு notification போல.

                           வலிகள் / வரிகள்

                           ராஜவர்மன்

Customize Text: Font Color:

Related Posts

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00