Reading Mode
ஏன் இப்படி ? என்று கேட்டால் யாருமே எதிர்பார்க்காத வித்தியாசமான ஒரு காரணத்தை சொல்கிறார்.அந்த தலைமை ஆசிரியையான அருட்சகோதரி மேரி போனா.
112 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் பெரும்பாலான மாணவர்கள் ஏழை குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.
இவர்களை அழைத்து வர பள்ளி நிர்வாகம் வேன் வழங்கி உள்ளது.
வேனுக்கு தனியாக டிரைவர் அமர்த்தினால் அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தின் மூலம் அவரது பெற்றோர்களுக்கு சிரமம் ஏற்படுமே என்று நினைத்த அருட்சகோதரி மேரி போனா தானே வேனை இயக்க முடிவு செய்து கடந்த சில மாதங்களாக அதை செய்து வருகிறார்.
வேன் டிரைவர் அவதாரம் முடித்த பின்னர் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியராகவும் பின்னர் வகுப்புகளுக்கு சென்று வழக்கமான ஆசிரியராகவும் பணியாற்றுகிறார்.
அருட் சகோதரி மேரி போனாவின் இச்செயல் அனைவரையும் வியக்க வைத்து தன் மேலான பதவியையும் கடந்து சேவையுடன் பணி செய்யலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். இதனிடையே பொதுமக்களிடம் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்று வருகிறார்.