1
Reading Mode
அழகே உன்னை ஆராதிக்கிறேன் …..
அழகே உந்தன் மடி சாய்ந்து
காலம் மறந்து உறங்க வேண்டும்,கம்பன் எழுதிய காதல் வரிகளை உன் குரலில் கேட்டு ரசிக்க வேண்டும்.
உன்னை அணைத்தபடி
உலகம் மறந்து தூங்க வேண்டும்,உன் விரல்கள் என் தலைமுடியை
மெதுவாய் கோதி தாலாட்ட வேண்டும்.
கையோடு கை கோர்த்து
கனவுகளின் பாதை நடக்க வேண்டும்,தண்ணீரின் குளிரில் கூட உன் அருகாமையின் வெப்பம் உணர வேண்டும்.
உதட்டுக்கும் உதட்டுக்கும் இடையில் ஒரு நொடி ஏக்கம் இருக்க வேண்டும்,
உயிருக்குள் உயிராய் கலந்து பிரிவில்லா பந்தம் மலர வேண்டும்.
காதலியாய் நீ வந்தாலும்,
தாயாய் என்னை அரவணைக்க வேண்டும்,
சேயாய் நானும் உன்னுள் கரைந்து ஒரே உயிராய் மாற வேண்டும்.
என்றென்றும் உன் நினைவில்……
Customize Text:
Font Color: