ராமேஸ்வரம் ஆலயத்தில் அதிர்ச்சி ! அசைவ உணவுகளுடன் கொண்டாட்டம் ! பக்தர்கள் கடும் கண்டனம் !!?

by ஆசிரியர்
Reading Mode

ராமேஸ்வரம் ஆலயத்தில் அதிர்ச்சி ! அசைவ உணவுகளுடன் கொண்டாட்டம் ! பக்தர்கள் ஆதங்கம் !!?

இராமேஸ்வரம் இராமநாதசுவாமி ஆலயத்திற்குள் அறநிலையத்துறை நிர்வாகி ஒருவருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இராமேஸ்வரம் ஆலயத்தின் அலுவலகத்திற்குள் அறநிலையத்துறை நிர்வாகி சேதுப்பிரியா என்பவருக்கு, கோயில் இணை ஆணையர் முன்னிலையில் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இராமேஸ்வரம் இராமநாத சுவாமி ஆலயம் மிகவும் பழமையானது சைவ ஆகம விதிப்படி இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது , பக்தர்கள் மிகவும் புனிதமாகக் கருதும் இக்கோயில் வளாகத்திற்குள், முட்டை கலந்த கேக் வெட்டப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜொமேட்டோ (Zomato) மூலம் கோயில் பெயரிலேயே சிக்கன் சுக்கா, நண்டு லாலிபாப் போன்ற அசைவ உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டதற்கான பில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி பக்தர்கள் மற்றும் ஆன்மீக அமைப்புகள் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

ஆலயத்தின் அலுவலகப் பணிக்காக நியமிக்கப்படும் அதிகாரிகளும், அலுவலர்களும் இந்து மதத்தைச் சாராதவர்களாகளையும் , தெய்வ பக்தி இல்லாதவர்களையும் பணிக்கு அமர்த்துவதால் தான் இது போன்ற இழிச் செயல்கள் நடக்க காரணமாக அமைந்து விடுகிறது. ஆதலால், ஆலயப் பணிக்கு நியமிக்கப்படும் அலுவலர்களும் அதிகாரிகளும் அதற்கு உரியவர்கள் தானா என்பதை உறுதி செய்த பிறககே நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்செயலுக்காக மிகப்பெரிய கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

Customize Text: Font Color:

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00